மோசனமா படமா? சர்ச்சைக்கு நடுவே விருதை வென்ற பேட் கேர்ள்.. அப்படி படத்தில் என்னதான் இருக்கு!

சென்னை: பேட் கேர்ள் திரைப்படம் மோசமான திரைப்படம், பெண்ணின் கண்ணியத்தை கெடுக்கும் திரைப்படம் இப்படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என பலரும் இந்த திரைப்படத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், பேட் கேர்ள் திரைப்படம் NETPAC விருதை வென்றுள்ளது.

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், ஆண்டு தோறும், ஜனவரி மாத இறுதியில் நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஒரு திரைப்பட விழாவாகும். அந்த விழாவில், இயக்குனர்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, வளர்ந்து வரும் திறமையாளர்களை அங்கீகரிக்கும் ஒரு திரைப்பட விழாவாகும். இந்த திரைப்பட விழாவில் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட் கேர்ள் விருதை வென்றுள்ளது.

bad girl

பேட் கேர்ள் சர்ச்சை: இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரித்து உள்ள திரைப்படம் பேட் கேர்ள். இப்படத்தில், அஞ்சலி சிவராமன்,சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பருவம் அடைந்த அஞ்சலி, பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் ஆண் நண்பரை வைத்துக்கொள்வது பற்றியும், காதலிப்பது, படுக்கை அறை சமாச்சாரம் என அனைத்தையும் தெரிந்து கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க ஆசைப்படுகிறாள். நான் பெரியவளாகி விட்டேன், என் இஷ்டப்படித்தான் வாழ்வேன் என்று பெற்றோரின் விருப்பங்களை மீறி நடந்து கொள்கிறாள். இதனால், அவள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன என்பதை படத்தில் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் வர்ஷா பரத். பேட் கேர்ள் படத்திற்கு ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்து தமிழில் அறிமுகமாகி உள்ளார்.

தடைவிதிக்க வேண்டும்: பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்டுத்தியது. பள்ளிக்கு வரும் சிறுமி, காமத்தில் ஈடுபடுவது, காதலில் ஈடுபடுவது, தட்டி கேட்கும் பெற்றோரை சிறுமி எதிர்த்து பேசி, தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் சிறுமிகள் கர்ப்பம் அடைவது அதிகமாக இருக்கும் நிலையில் இப்படி ஒரு படம் தேவையா என்றும், இந்த படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என பலரும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், . ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், பேட் கேர்ள் திரைப்படம் NETPAC விருதை வென்றுள்ளது.

தமிழ் சினிமாவுக்கு ஒரு மைல்கல்: அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் ஆகியோர் தயாரித்த இந்த பேட் கேர்ள் ஒரு தைரியமான மற்றும் கவர்ச்சியான திரைப்படமாகும். இது கதை மற்றும் நட்சத்திரங்களின் நடிப்பால் சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த வெற்றி உலகளாவிய தமிழ் சினிமா வளர்ந்து வருகிறது என்பதை காட்டி உள்ளது. மேலும், பிராந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு புதிய கதவுகளைத் திறக்கிறது. இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களை தைரியமான ஆக்கப்பூர்வமான முன்னேற்ற முடிவுகளை எடுக்க வைத்துள்ளது. IFFR 2025 இல் பேட் கேர்ளின் வெற்றி அதன் அணிக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, உலக அரங்கில் இந்திய மற்றும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வெற்றி என பலரும் பேட் கேர்ள் படக்குழுவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X