அமரன் போன் நம்பர் சர்ச்சை.. வசந்தபாலனுக்கு லிங்குசாமி கொடுத்த டார்ச்சர்.. என்ன பண்ணார் தெரியுமா?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதம் 31ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது அமரன் படம். இந்தப்படம் 300 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே இந்தப் படம் 147 கோடி ரூபாய்கள் வசூலை தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி முதல் முறையாக ஜோடி சேர்ந்த நிலையில் இவர்களின் கெமிஸ்ட்ரி படத்தில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தொடர்ந்து ஹீரோவின் மறைவையும் இவர்களின் முந்தைய காதல் மிகப்பெரிய அளவில் பலப்படுத்தியிருந்தது. இந்நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோ பிக்காக வெளியான இந்தப் படம் கங்குவா உள்ளிட்ட திரையரங்குகளில் மற்ற படங்களை ஓரங்கட்டிவிட்டு வசூல் சாதனை செய்து வருகிறது.

sivakarthikeyan vasanthabalan lingusamy

அமரன் படம்: நடிகர் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது அமரன் படம். தீபாவளி கொண்டாட்டமாக வெளியான இந்தப் படம் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக உருவாகியிருந்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தொடர்ந்து 21 நாட்களாக ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து திரையரங்குகளில் மாஸ் காட்டி வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து வெளியான சூர்யாவின் கங்குவா உள்ளிட்ட படங்களையும் ஓரங்கட்டிவிட்டு அமரன் படம் வசூல் சாதனை செய்து வருகிறது.

மொபைல் போன் சர்ச்சை: கடந்த 21 நாட்களில் இந்தப் படத்தின் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்ஸ் 300 கோடிகளை தாண்டியுள்ளது. தமிழகத்தில் மட்டுமே அமரன் படம் கடந்த 21 நாட்களில் 147 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதால், ஓடிடி ரிலீசும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி என்ட்ரி காட்சியில் ஒரு மொபைல் போன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் நிஜத்தில் இந்த போன் நம்பரை கொண்டுள்ள பொறியியல் மாணவர் மிகப்பெரிய டார்ச்சரை அனுபவித்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

லிங்குசாமியால் வசந்தபாலனுக்கு டார்ச்சர்: படம் வெளியான நாளில் இருந்து தொடர்ந்து வரும் அழைப்புகளால் தன்னால் தூங்கவோ, படிக்கவோ மற்ற வேலைகளை செய்யவோ முடியவில்லை என்று வேதனை தெரிவித்திருந்த அவர், பட நிறுவனத்திடம் 1.1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இந்த விஷயத்தை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் வசந்தபாலன், இதே போன்ற டார்ச்சரை தானும் அனுபவித்ததாக தன்னுடைய வேதனையை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் லிங்குசாமியால் இந்த பிரச்சினையை தான் அனுபவித்த நிலையில், தானும் இழப்பீடு கேட்டிருக்கலாம் போலயே என்று அவர் தற்போது குறிப்பிட்டுள்ளார். லிங்குசாமியிடம் தன்னுடைய குடும்பத்தோடு கேன்டில் லைட் டின்னர் தா என்றும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

மொபைல் நம்பரால் பிரச்சினை: சண்டக்கோழி படம் வெளியான காலகட்டத்தில், படத்தின் சிறப்புக்காட்சி மற்றும் FDFS காட்சிகளை பார்த்த தன்னுடைய நண்பர்கள், சண்டக்கோழி படம் 10 ரன் படங்களுக்கு சமம் என்று கூறியதைக் கேட்டு, இதை குறிப்பிட்டு லிங்குசாமிக்கு தானும் வாழ்த்து செய்தியை அனுப்பியதாக வசந்தபாலன் தெரிவித்துள்ளார். இதையடுத்து வெயில் படத்தின் சூட்டிங்கில் தான் பிசியாக இருந்த நிலையில் தொடர்ந்து தனக்கு மொபைலில் கால்கள் வந்ததாகவும் அனைவரும் நீங்கள் விஷாலா, லிங்குசாமியா என்று கேட்டதால் தான் தொடர்ந்து டார்ச்சரை அனுபவித்ததாகவும் தன்னுடைய வேலைகளை செய்யவே முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டார்ச்சரை அனுபவித்த வசந்தபாலன்: இதையடுத்தே லிங்குசாமிக்கு பாராட்டி தான் அனுப்பிய செய்தியை விளம்பர யுக்தியாக அவர்கள் தினத்தந்தி விளம்பரத்தில் போட்டு தன்னுடைய நம்பரையும் போட்டது குறித்து தான் தெரிந்துக் கொண்டதாக லிங்குசாமி தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தான் லிங்குசாமியிடம் கேட்டபோது, விளம்பர யுக்தி என்று அவர் பதிலளிக்க, வெங்காய யுக்தி என்று தான் மனதிற்குள் திட்டியதாகவும், படத்தின் வெற்றியால் லிங்குசாமி மகிழ்ச்சியில் இருந்த நிலையில், தன்னுடைய பிரச்சினையை கூறி அவரை சங்கடப்படுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டதாகவும் வசந்தபாலன் தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X