எத்தனை தடைகள்.. எத்தனை வேலிகள்.. எத்தனை இடையூறுகள்.. வசந்தபாலன் வேதனை!

சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ், அபர்ணதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளது ஜெயில் படம்.

இந்தப் படத்தின் ரிலீசை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது தடைகளை தாண்டி இந்தப் படம் வெளியாக உள்ளது.

இந்த படம் ரிலீஸ் குறித்து இயக்குனர் வசந்தபாலன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜெயில் படம்

ஜெயில் படம்

நடிகர் ஜிவி பிரகாஷ், அபர்ணதி நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயில். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் வரும் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசை

ஜிவி பிரகாஷ் இசை

படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்தின் இசை அமைப்பை நாயகன் ஜிவி பிரகாஷே மேற்கொண்டுள்ளார்.

தனுஷ் பாடிய பாடல்

தனுஷ் பாடிய பாடல்

இந்த படத்தின் ஒரு பாடலை தனுஷ் பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் டிரைலர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

வசந்தபாலன் - ஜிவி கூட்டணி

வசந்தபாலன் - ஜிவி கூட்டணி

வசந்தபாலன் முன்னதாக எடுத்துள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. இந்நிலையில் அவர் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. சமீப காலங்களில் ஜிவி பிரகாஷின் நடிப்பிலும் மெருகு காணப்படுகிறது.

பேச்சுலர் படம்

பேச்சுலர் படம்

இரு தினங்களுக்கு முன்பு அவரது நடிப்பில் வெளியான பேச்சிலர் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் ஐந்து நாட்கள் இடைவெளியில் தற்போது ஜெயில் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போன நிலையில் சமீபத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

படம் வெளியீட்டில் சிக்கல்

படம் வெளியீட்டில் சிக்கல்

ஆனால் படத்திற்கு சாதகமாகவே தீர்ப்பு வெளிவந்துள்ளது. படத்தை ரிலீஸ் செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குனர் வசந்தபாலன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வசந்தபாலன் வேதனை

வசந்தபாலன் வேதனை

எத்தனை தடைகள், எத்தனை வேலிகள், எத்தனை இடையூறுகள் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜெயில் என்று பெயர் வைத்ததாலேயோ என்னவோ படாத பாடுகளை பட வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

வசந்தபாலன் மகிழ்ச்சி

வசந்தபாலன் மகிழ்ச்சி

கோர்ட் வரை சென்று நல்ல நீதி அரசர் தந்த தீர்ப்பால் தற்போது படம் தடைகளை தாண்டி ஒன்பதாம் தேதி ரிலீசாக உள்ளதாகவும் இது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ஜிவி பிரகாஷின் பேச்சிலர் படம் அவருக்கு தற்போது நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. இந்நிலையில் இன்னும் இரு தினங்களில் ஜெயில் படம் வெளியாக உள்ளது இந்த படமும் மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கலாம்.

சிறப்பான இயக்குனர்

சிறப்பான இயக்குனர்

வசந்தபாலனின் முந்தைய படங்கள் அவருக்கு சிறப்பான இயக்குனர் அந்தஸ்தை பெற்றுத் தந்துள்ளது. அதேபோல இந்த ஜெயில் படமும் ஜிவி பிரகாஷ் உடன் அவர் கூட்டணி அமைத்துள்ள நிலையில் சிறப்பான விமர்சனங்களையும் வெற்றியையும் பெற்றுத் தரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X