இயக்குனர் வஸந்தின் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்".,, அமெரிக்க திரைப்பட விழாவுக்கு தேர்வு!

"சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்"திரைப்படம் அமெரிக்க திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளது.

சென்னை: இயக்குனர் வஸந்தின் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்"திரைப்படம் அமெரிக்க திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளது.

கேளடி கண்மணி, ஆசை உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியவர் வஸந்த். இவர் தற்போது இயக்கியுள்ள படம் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்". இத்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், "மயக்கம் என்ன" சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Director Vasanth movie to premired in American film festival

இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை அடிப்படையாக கொண்டு திரைக்கதையாக்கி இயக்குனர் வஸந்த் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

Director Vasanth movie to premired in American film festival

இத்திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் பிரத்யோகமாக பின்னனி இசை இல்லாதாது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது குறிப்பிடதக்கது. சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது.

Director Vasanth movie to premired in American film festival

இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறும் சர்வதேச திபுரான் திரைப்படவிழாவிலும் மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட இயக்குனர் வஸந்தின் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" தேர்வாகியுள்ளது. தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட பட்டுகொண்டிருக்கும் இத்திரைபடத்திற்க்கு திரைப்ப்ட விழாக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Read more about: vasanth
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X