மாரிமுத்து எப்படி என்னிடம் உதவி இயக்குநராக சேர்ந்தாரு தெரியுமா?.. அஞ்சலி செலுத்திய வசந்த் உருக்கம்!

சென்னை: கேளடி கண்மணி படத்திற்கு மாரிமுத்து எழுதிக் கொண்டு வந்த வசனம் தான் அவரை உதவி இயக்குநராக சேர்த்துக்கொள்ள காரணம் என மாரிமுத்துவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இயக்குநர் வசந்த் உருக்கத்துடன் பேசிய பேச்சு ரசிகர்களை உருக வைத்துள்ளது.

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து தனது சொந்த ஊரில் இருந்து சினிமா ஆசை காரணமாக சென்னைக்கு ஓடி வந்த நிலையில் அவரது கையெழுத்து பிடித்துப்போய் பாடலாசிரியர் வைரமுத்து உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.

Director Vasanth pays tribute to Marimuthu and reveals how he joins as assistant director with him

இயக்குநர் வசந்த் நடிகர் அஜித்தின் ஆசை படத்தை இயக்கிக்கொண்டிருந்த போது வைரமுத்து மாரிமுத்துவை அறிமுகம் செய்து வைத்து இவன உங்க கூட அசிஸ்டென்டா வச்சுக்கோங்க நல்ல திறமையானவர் என அறிமுகம் செய்து வைத்தார்.

பாப்கார்ன் விமர்சனம்: வைரமுத்து சார் சொல்லிட்டாரு என்று மாரிமுத்துவை சேர்த்துக் கொள்ள முடிவு செய்தாலும் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஏதாவது எழுதிட்டு வாங்க அப்படின்னு மாரிமுத்து விடும் சொல்லி அனுப்பினேன். என்னோட முதல் படம் கேளடி கண்மணி அந்த படத்துக்கு அவர் ஒரு விமர்சனம் எழுதிட்டு வந்தாரு.. படத்தை பாராட்டி நிறைய விஷயங்கள் சொன்னாலும் அந்த விமர்சனத்தை விட முதலில் தியேட்டருக்கு இரண்டு பாப்கார்ன் வாங்கிட்டு போயிட்டு உட்கார்ந்து திரும்பி வரும்போது என் பையில அந்த ரெண்டு பாப்கார்ன் சாப்பிடாமல் அப்படியே இருந்தது. அந்த அளவுக்கு கேளடி கண்மணி படம் என்னை ஈர்த்தது என விமர்சித்திருந்தார்.

அந்த விமர்சனத்தை பாத்துட்டு தான் அவருக்குள்ள இருக்க திறமைய பார்த்து என்னோட உதவி இயக்குனரா ஆக்கினேன் என மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் இயக்குனர் வசந்த் உருக்கமாக பேசியது ரசிகர்களை உலுக்கி உள்ளது.

அப்பா மாதிரினு சொன்னாரு: மேலும், என்னோட சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்தில் ஒரு கேரக்டர்ல நடிக்க மாரிமுத்துவிடம் கேட்டேன். ஒரு என்கிட்ட 10 வருஷம் உதவி இயக்குனராகவும் அசோசியேட் டைரக்டராகவும் பணியாற்றி இருந்தாலும் கடந்த சில வருடங்களாக எங்க போனாலும் மாரிமுத்து என்கிற அளவுக்கு அவர் மிகப்பெரிய புகழை அடைந்து இருந்தார்.

நான் கொஞ்சம் தயங்கி கேட்டதை புரிந்து கொண்ட மாரிமுத்து பாலச்சந்தர் சார் தாத்தா மாதிரி நீங்க எனக்கு அப்பா மாதிரி நீங்க இல்லன்னா எனக்கு இந்த பேர் இல்ல சார் நீங்க எத்தனை படத்துல நடிக்க கூப்பிட்டாலும் நான் வந்து நடிப்பேன் அப்படின்னு சொன்ன மனுஷன் மாரிமுத்து இன்னைக்கு இல்லாம போனது ரொம்பவே வேதனையா இருக்குது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் இணை இயக்குநர் வசந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X