நவரசா படத்தில் இருந்து கேவி ஆனந்த் விலகினார்… புதிதாக இணைந்த பிரபல இயக்குனர்!
சென்னை: மணிரத்னம், ஜெயேந்திரா தயாரிப்பில் உருவாகி வரும் ஆந்தாலஜி திரைப்படம் "நவரசா".
பிரபல முன்னனி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் கூட்டணியில் 9 கதைகளாக தயாராகி வருகிறது.
இந்த படத்தில் இருந்து இயக்குனர் K. V ஆனந்த் விலகியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

9 கதைகள்
கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் என முன்னணி இயக்குனர்களின் கூட்டணியில் முழுவீச்சில் தயாராகி வருகிறது நவரசா. மொத்தம் 9 கதைகளை கொண்ட இந்த படம் நேரடியாக Netflix ல் வெளிவரவுள்ளது.

Netflix ரிலீஸ்
சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரேவதி, பூர்ணா, ரித்விகா நித்யா மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். நவரசா குறித்த வீடியோ ஒன்றை Netflix சமீபத்தில் ரிலீஸ் செய்தது.

திடீர் மாற்றம்
அயன், கவன், காப்பான் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் K. V. ஆனந்த நவரசா படக்குழுவில் இருந்து திடீரென்று விலகியுள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த காரணம் ஏதும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

புதிதாக இணைந்தார்
இதையடுத்து நவரசா படக்குழுவில் K.V. ஆனந்த்க்கு பதிலாக பிரபல இயக்குனர் வசந்த் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வசந்த் இயக்கும் பாகத்தில் நடிக்க, நடிகை அதிதி பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











