ஜெயில் படம் திட்டமிட்டபடி ரிலீசாகும்… வசந்தபாலன் சூப்பர் அப்டேட்

சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ளது ஜெயில் படம்.

அபர்ணிதி ஜோடி சேர்ந்துள்ள இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் வரும் 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

ஜெயில் படம்

ஜெயில் படம்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயில். இந்தப் படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார். சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்துவந்த ஜிவி தன்னுடைய கதைத்தேர்வில் தற்போது கவனம் செலுத்தி சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்துள்ள ஜெயில் படம் முக்கியமான படமாக அமைந்துள்ளது.

வசந்தபாலன் இயக்கம்

வசந்தபாலன் இயக்கம்

அங்காடித் தெரு உள்ளிட்ட சிறப்பான படங்களை இயக்கியுள்ள வசந்தபாலன் தற்போது இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அவரது முந்தைய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்தப் படத்திறகும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படத்தின் ரிலீசை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ரிலீசில் பிரச்சினை

ரிலீசில் பிரச்சினை

ஜிவி பிரகாஷிற்கு படத்தில் ஜோடியாகியுள்ளார் அபர்ணதி. இவர்களின் கெமிஸ்ட்ரி படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் ட்ரெயிலர் பாடல் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு சிறப்பான கவனத்தை பெற்றுள்ள நிலையில், படத்தின் ரிலீசில் பிரச்சினைகள் காணப்பட்டது. இதனால் படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீசாகுமா என்ற கேள்வி எழுந்தது.

குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ்

குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ்

ஆனால் தற்போது படம் குறிபிபட்ட தேதியில் ரிலீசாகும் என்று இயக்குநர் வசந்தபாலன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் படத்தின் சிறப்பான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். வித்தியாசமான வகையில் அந்த போஸ்டர் அமைந்துள்ளது. தடைகளை உடை என்றும் அவர் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான படம்

சிறப்பான படம்

ஜிவி பிரகாஷின் சினிமா கேரியரில் இந்தப் படம் சிறப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரெயிலரில் அவரது இயல்பான நடிப்பை பார்க்க முடிகிறது. ஆக்ரோஷமான நடிப்பிலும் பின்னி பெடலெடுத்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

முன்னதாக கொரோனா அச்சுறுத்தலால் படத்தில் வெளியீடு தள்ளிப் போனது. படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இதன் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார். முன்னதாக ஜிவி பிரகாஷின் டார்லிங் மற்றும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய படங்களை இந்த நிறுவனம் வெளியிட்ட நிலையில் தற்போது 3வதாக இந்தப் படத்தை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X