twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாழ்வின் அதி உன்னதத்தை உணர்த்துகிறது ‘ஹோம்‘… அற்புதமான படம்… நெகிழ்ந்த வசந்தபாலன் !

    |

    சென்னை : கதைக்காக எங்கெங்கோ தேடுகிறோம், வீட்டுக்குள்ளேயே கதை இருக்கிறது என்பதை ஹோம் திரைப்படம் உணர்த்துகிறது என்று இயக்குனர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.

    மலையாளத்தில் வெளியான ஹோம் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    மகளை ஹீரோயினாக களமிறக்க முயற்சிக்கும் 90 களின் பிரபல நடிகை...யாருன்னு தெரியுமா ? மகளை ஹீரோயினாக களமிறக்க முயற்சிக்கும் 90 களின் பிரபல நடிகை...யாருன்னு தெரியுமா ?

    தமிழ் சினிமா உண்மையாகவே மூச்சு திணறுகிறது என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஹோம்

    ஹோம்

    ரோஜின் தாமஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ஹோம். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் பல்வேறு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினரைப் பாராட்டி வருகிறார்கள்.

    அற்புதமான கதை

    அற்புதமான கதை

    Home அற்புதமான ஒரு இடம். அதற்குள் நிகழும் சண்டை சச்சரவுகளை தாண்டி எந்த ஸ்வைப்புமே இல்லாமல் மீண்டும் அன்பு அங்கு நிரம்பும் என்பதை எந்தவித உறுத்தலுமின்றி கவிதையாய் கடத்துகிறது இப்படம். கொஞ்சம் மொபைல் போனிலிருந்து வெளியே வந்து பார்த்தால் அதில் நேரும் எந்த விஷயமும் நம்மை பாதிக்கவில்லை என புரிந்து கொள்ள முடியும். ஹோம் படம் வளரும் தொழில் நுட்பத்தால், மாற்றியிருக்கும் குடும்ப மற்றும் சமூக உறவுகளை அடையாளம் காட்டி உள்ளது ஹோம் திரைப்படம். வளர்ச்சி என்ற பெயரில் நாம் மறந்து போனவற்றை மலையாள சினிமாதான் அதிகம் பேசியிருக்கிறது. அவற்றின் உச்சம் இப்படம்.

    நன்றி ஹோம்

    நன்றி ஹோம்

    அப்படி அனைவரும் கொண்டாடும் ஹோம் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பதிவில், கதைக்காக எங்கெங்கோ தேடுகிறோம், வீட்டுக்குள்ளேயே கதை இருக்கிறது என்பதை ஹோம் திரைப்படம் உணர்த்துகிறது. இன்றைய வாழ்வின் அற்பங்கள் மூலமாக வாழ்வின் அதி உன்னதத்தை ஹோம் பேசுகிறது. ஒரு மாத கண்ணீரும் நேற்றிரவு என் தலையணையை நனைத்தது. கண்ணீர் வெளியேறியது ஒருவித விடுதலையாக இருந்தது. நன்றி #home.

    தமிழ் சினிமா திணறுகிறது

    தமிழ் சினிமா திணறுகிறது

    மலையாள சினிமா ஓடிடியின் தன்மையை, தனித்துவத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு தொடர்ந்து நல்ல திரைப்படங்களை எழுதி வெளியிடுகிறது. தமிழ் சினிமா உண்மையாகவே மூச்சு திணறுகிறது. திரைக்கதை ஆசிரியர்களை உருவாக்கத் தவறியதன் துயரத்தை அனுபவிக்கிறோம் என்று வசந்த பாலன் தெரிவித்துள்ளார்

    Recommended Video

    CHENNAI-28 லதான் என்னோட Career தொடங்குச்சு| Still Photographer R. S. Raja chat p-02 |Filmibeat Tamil
    ஜெயில் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது

    ஜெயில் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது

    வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயில். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. தற்போது அர்ஜுன் தாஸ் நடித்துவரும் படத்தை இயக்கி வருகிறார் வசந்தபாலன். இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

    துஷாரா நாயகி

    துஷாரா நாயகி

    இதில் நாயகியாக சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு மனைவியாக நடித்து, பலரது பாராட்டையும் பெற்ற துஷாரா நடித்து வருகிறார். தற்போது இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.

    English summary
    director Vasantha Balan of Angadi Theru and 'Aravaan' fame is currently producing and directing a new untitled film. Vasantha balan said home is wonderful movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X