கொரோனாவில் இருந்து மீண்டார் இயக்குநர் வசந்தபாலன்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

சென்னை: இயக்குநர் வசந்த பாலன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.

வெயில் படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் வசந்த பாலன். தொடர்நுது அங்காடித் தெரு, அரவான், காவிய தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களை இயக்கியிருந்தாலும் தரமான இயக்குநராக பார்க்கப்படுகிறார்.

நெருங்கிய நண்பர்

நெருங்கிய நண்பர்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வசந்த பாலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தியை கேட்டு அவரது நெருங்கிய நண்பரான லிங்குசாமி அதிர்ச்சி அடைந்தார்.

ஆயிரம் முத்தங்கள் லிங்கு

ஆயிரம் முத்தங்கள் லிங்கு

பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துக்கொண்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வசந்த பாலனை நேரில் சந்தித்து அவருக்கு நம்பிக்கை அளித்தார். இதனால் நெகிழ்ந்துப்போன வசந்தபாலன் ஆயிரம் முத்தங்கள் லிங்கு ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ்வாய் என பதிவிட்டிருந்தார்.

நேற்று டிஸ்சார்ஜ்

நேற்று டிஸ்சார்ஜ்

இந்நிலையில் கொரோனாவில் இருந்து முற்றிலும் மீண்டுள்ளார் இயக்குநர் வசந்தபாலன். அவருக்கு கொரோனா தொற்று நெகட்டிவான நிலையில் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார் வசந்த பாலன்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

திரைத்துறை பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வசந்த பாலன், கொரோனா நெகட்டிவ் ஆகி மீண்டு வந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X