ஜெயில் படத்தின் இலவச டிக்கெட் பெற அரிய வாய்ப்பு... இயக்குனர் வசந்தபாலன் அறிவிப்பு!
சென்னை: இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில்.
ஜிவி பிரகாஷ் குமார்,அபர்ணதி இணைந்து நடித்துள்ள ஜெயில் படத்தில் இதுவரை கண்டிராத பல உண்மை சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ஜெயில் படத்தின் இலவச டிக்கெட்டுகளை பெற இயக்குனர் வசந்தபாலன் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.

உண்மை சம்பவங்களை மையப்படுத்திய
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் அடுத்த கட்டமாக மிகச் சிறந்த நடிகர் என்ற பெயரையும் எடுக்க பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த ஜிவி பிரகாஷ் குமார் சமூகத்தில் மாற்றம் ஏற்படக் கூடிய சில உண்மை சம்பவங்களை மையப்படுத்திய கதைகளிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

முழுக்க முழுக்க ஜெயில் குறித்து
அந்த வகையில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது தயாராகியுள்ள ஜெயில் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். ஜெயில் என்ற தலைப்பிற்கு ஏற்றது போலவே முழுக்க முழுக்க ஜெயில் குறித்த முக்கிய தகவல்களை பற்றிய திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது

வடசென்னை பையனாக ஜிவி பிரகாஷ்குமார்
தேன் படத்தை தொடர்ந்து நடிகை அபர்ணதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பக்கா வடசென்னை பையனாக ஜிவி பிரகாஷ்குமார் கலக்கியுள்ளார். இதுவரை ஜிவி பிரகாஷ் குமார் நடித்த திரைப்படங்களிலேயே ஜெயில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரம் எனவும் தெரியவந்துள்ளது.

இலவசமாக டிக்கெட்டுகளை வெல்ல
இந்த நிலையில் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ள ஜெயில் படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக பெற இயக்குனர் வசந்தபாலன் கவிதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி ஜெயில் படத்தை பற்றி கவிதைகள் எழுதும் முதல் 20 பேருக்கு ஜெயில் டிக்கெட்டுகள் மற்றும் அதனுடைய புத்தகங்களும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

கவிதை போட்டி
அதன்படி வசந்தபாலன் கூறியிருப்பதாவது "ஜெயில் தலைப்பை ஒட்டி நான் இருபதுக்கும் மேலான கவிதைகள் எழுதிவிட்டேன்.
விருப்பம் உள்ள வாசகர்கள் ஜெயில் தலைப்பை ஒட்டி குறுங்கவிதைகள் அதாவது 10 வரிகளுக்கு மிகாமல் எழுதி அனுப்பலாம்.நல்ல கவிதைகள் அனைத்தும் என் முகப்புத்தகத்தில் பிரசுரமாகும். முதல் இருபது கவிதை எழுதியவர்களுக்கு ஜெயில் திரைப்படத்தின் டிக்கெட்டும் புத்தகங்களும் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.எதுவெல்லாம் நம்மை ஒடுக்கி அடக்கி வைக்கிறதோ அதெல்லாம் ஜெயில் தானே.


Click it and Unblock the Notifications











