இயக்குனர் வசந்தபாலனின் ஜெயில் சென்சார் தகவல் வெளியானது!

சென்னை: இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் விருதுகளுக்கு பஞ்சமில்லாமல் வெற்றிகளை குவிக்கிறது

அந்த வகையில் இப்பொழுது ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இதுவரை கண்டிராத ஜெயில் குறித்த சுவாரசியமான உண்மை சம்பவங்களை பற்றிய திரைப்படமாக ஜெயில் உருவாகி இருக்க இப்படத்தின் சென்சார் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

பல விருதுகளையும்

பல விருதுகளையும்

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வசந்தபாலன் வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே நல்ல இயக்குனர் என்ற பெயரை பெற்றார் வெயில் திரைப்படம் இவருக்கு நல்ல பெயர் மட்டுமல்லாமல் பல விருதுகளையும் அள்ளித் தந்தது

இதுவரை யாரும் சொல்லிடாத

இதுவரை யாரும் சொல்லிடாத

வெயில் வெற்றியை தொடர்ந்து அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் உள்ளிட்ட நல்ல படைப்புகளை கொடுத்து வரும் வசந்தபாலன் இயக்கத்தில் ஒவ்வொரு படங்களிலும் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதைகளை எழுதுவதில் வழக்கம் உடையவர். அந்த வகையில் இப்போது இதுவரை யாரும் சொல்லிடாத ஜெயிலில் நடக்கும் பல முக்கிய தகவல்களை பற்றிய திரைப்படமாக ஜெயில் உருவாகி உள்ளது.

ஜிவி பிரகாஷ்குமார் இதில் வடசென்னை பையனாக

ஜிவி பிரகாஷ்குமார் இதில் வடசென்னை பையனாக

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இப்படத்தில் ஹீரோவாக நடித்து இருக்க கதாநாயகியாக அபர்ணதி நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ்குமார் இதில் வடசென்னை பையனாக நடித்துள்ளார். அதற்காக பிரத்தியேகமாக பயிற்சி எடுத்து இதுவரை நடித்த திரைப்படங்களை விடவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தில் நடித்துள்ளது அவரது நடிப்பை பார்க்கும் போதே தெரிகிறது.

யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராக இருந்த ஜெயில் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் வெளியிட முடியாமல் இருந்தது. இந்த நிலையில் அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக முடிக்கப்பட்டு இப்பொழுது திரைப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஜிவி பிரகாஷ் திரைவாழ்க்கையில் மிக முக்கிய படமாக இருக்கும் ஜெயிலில் நடக்கும் பல உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயில் படத்திற்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. "இன்று ஜெயில் விடுதலைக்கான அரசு சான்றிதழ் கிடைத்தது" என இயக்குனர் வசந்தபாலன் ஜெயில் சென்சார் " தகவலை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X