twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. ஊரெங்கும் ஒப்பாரி பாடல்.. நிறுத்த ஒரே வழி.. இயக்குநர் வசந்தபாலன் உருக்கம்!

    |

    சென்னை: கொரோனாவில் இருந்து மீண்டுள்ள இயக்குநர் வசந்தபாலன், தனித்திருங்கள் என்பதை வலியுறுத்தி ஷேர் செய்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குநர் வசந்தபாலன், 20 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்.

    படப்பிடிப்பு தளத்தை சர்வ நாசமாக்கிய டவ் தே புயல்.. கடும் அப்செட்டில் வலிமை பட தயாரிப்பாளர்!படப்பிடிப்பு தளத்தை சர்வ நாசமாக்கிய டவ் தே புயல்.. கடும் அப்செட்டில் வலிமை பட தயாரிப்பாளர்!

    தான் மீண்டு வந்ததற்கு மருத்துவமும் நண்பர்களுமே காரணம் என மருத்துவர்களுக்கும் தனது நண்பர் வரதராஜன் உட்பட உதவிய நண்பர்களுக்கு நன்றி கூறி ஒரு பதிவை ஷேர் செய்திருந்தார் வசந்த பாலன்.

    நாடு சந்தித்துள்ள துயரம்

    நாடு சந்தித்துள்ள துயரம்

    இந்நிலையில் உச்சத்தில் உள்ள கொரோனாவால் நாடு சந்தித்துள்ள துயரத்தை தனது வார்த்தைகளால் உருக்கமாக பதிவிட்டுள்ளார் வசந்தபாலன். கொரோனா பரவலையும் தற்போது நாடு சந்தித்துள்ள துயரத்தையும் கடக்க தனித்திருங்கள் முக கவசம் அணியுங்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில் கூறியிருப்பதாவது,

    மங்களப் பத்திரிகை அச்சடிக்கும்

    மங்களப் பத்திரிகை அச்சடிக்கும்

    "கொரானாவின் இரண்டாவது அலையின் தீவிரம் இந்தியாவில் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த காலம்.

    பகலிரவாக திருமணப் பத்திரிகையில் துவங்கி மங்களப் பத்திரிகை அச்சடிக்கும் மங்களம் அண்ணாச்சி அச்சாபீஸை மூடிவிட்டு வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி வெறித்து பார்த்தவண்ணம் இருக்கிறார்.

    ஆர்டர்கள் குவிந்த வண்ணம்

    ஆர்டர்கள் குவிந்த வண்ணம்

    எப்போதாவது கருப்பு வெள்ளையில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், துஷ்டி பத்திரிக்கை அச்சடிக்கும் மாரியப்பன் பிரஸ் இடைவிடாது கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை அச்சடித்த வண்ணம் இருக்கிறது. வெவ்வேறு பெயர்கள்,

    வெவ்வேறு முகங்கள், வெவ்வேறு வயதினர்,
    குழந்தைகள் உட்பட பல்வேறு புகைப்படங்கள் அவன் மேஜையில் சிதறி கிடந்தன. சரியாக தூங்கி இருபது நாட்களாகி விட்டது மாரியப்பனுக்கு... கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு ஆர்டர்கள் வெளியூரிலிருந்து எல்லாம் வந்து குவிந்தவண்ணம் இருந்தன.

    வலுவிழக்க தொடங்கிய மனம்

    வலுவிழக்க தொடங்கிய மனம்

    போஸ்டர்கள் அனுப்பும் போது அத்துடன் ஒரு ரோஜாப்பூ மாலை மற்றும் ஒரு சைக்கிள் பிராண்ட் ஊதுபத்தியைக் கட்டை கொடுத்தனுப்புவது மாரியப்பன் வழக்கம்.

    பள்ளித்தோழன் சரவணன் இறந்து போனான். தோழர் ராஜநாராயணன் இறந்தார். மாமா லட்சுமணன்,
    சித்தப்பா பிரமநாயகம் என மாரியப்பனின் உறவுகள் ஒவ்வொருவருக்கும் கண்ணீர்அஞ்சலி போஸ்டரை அச்சாபீஸில் அடிக்க அடிக்க அவன் மனம் மெல்ல வலுவிழக்கத் துவங்கியது. மனைவி தங்கம் போட்டு தரும்
    வெறும் டீயை மட்டும் குடித்துக் கொண்டிருந்தவன்
    அடுத்த நாட்களில் அதை குடிப்பதையும் நிறுத்தினான்.

    அழுது தீர்த்தான்

    அழுது தீர்த்தான்

    வெறும் கணேஷ் பீடியை மட்டும் துக்கத்தை இழுத்து வெளிவிடுவது போல விட்டபடி கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அடித்தவண்ணம் இருந்தான்... பேக்காலம்.. இல்லை மரணக்கூடாரமிட்டிருக்கும் கொள்ளை நோய்க்காலமா... அவனுக்கு ஒன்றும் புரியவில்லை...

    மெல்ல அழுதபடியே போஸ்டரை அடிக்க ஆரம்பித்தான்.
    கருப்பு வெள்ளை மையில் அவன் கண்ணீரும் கலந்திருந்தது. ஆர்டர் கொடுக்க வருபவர்களின் கைகளைப்பிடித்து அழுது தீர்த்தான். ஒரு மாதமாக அடித்து ஓய்ந்து ஒரு இரவு முழுக்க போஸ்டர்கள் மீது மயங்கி கிடந்தான். காலை வெயிலில் சுள்ளென பட கண் விழித்தான்.

    சத்தமாக ஒப்பாரி பாடல்

    சத்தமாக ஒப்பாரி பாடல்

    சுற்றிக்கிடந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அவன் உடலில் பித்தப்பூவை பூக்க செய்தது. போஸ்டர்களை அள்ளி பறக்க விட்டான். அச்சாபீஸை இழுத்து மூடி மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தான்.

    மாரியாத்தா கோவிலின் முன்பு சென்று "ஆத்தாத்தா மாரியாத்தா! அம்பது மக்கள பெத்தாத்தா! நீ உன் புள்ளைங்க ஒவ்வொன்னா பொசுக்குன்னு போறத பாத்துக்கிட்டு இப்படி இருக்கலாமா மாரியாத்தா !!!!!!என்று மூடப்பட்டு கிடந்த
    கோவிலின் கம்பிக்கேட்டில் ரத்தம் ஒழுக முட்டி அழுதான்.
    கண்ணீர் அஞ்சலி ஆர்டர் கொடுத்த வீடுகளின் முன்பு
    ஒரு முழு ஒப்பாரிப்பாடலை சத்தமாக பாடத்துவங்கினான்.

    ஒப்பாரி அடங்க ஒரே வழி

    ஒப்பாரி அடங்க ஒரே வழி


    அது அத்தனை உச்சஸ்தாயில் ஊர் முழுக்க கேட்டபடியிருந்தது. அவன் இடையறாது பாடியபடியிருக்கிறான். ஊர் அடங்கினாலும் பாடல் கேட்டபடியிருக்கிறது. பி.கு. (அவன் பாடலை நிறுத்த ஓரே வழி தனித்திருங்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியுங்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள்.

    காய்ச்சல் கண்டால் அலட்சியமின்றி சோதனை செய்து கொள்ளுங்கள் அரசின் மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.)" இவ்வாறு வசந்தபாலன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Director Vasantha Balan has shared a heartfelt post about Corona situation. He request people to wear mask and get vaccinated.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X