கொரோனா பாதிப்பு.. இயக்குநர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதி.. விரைவில் மீண்டு வருவேன் என பதிவு!

சென்னை: இயக்குநர் வசந்தபாலனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

Director Vasanthan Balan மருத்துவமனையில் அனுமதி | Jail, Arjun Das | Filmibeat Tamil

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய வசந்தபாலன் ஆல்பம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

வெயில், அங்காடித் தெரு, அரவாண், காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

விடாது கொரோனா

விடாது கொரோனா

இந்தியாவில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில், ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் கொரோனா பாதிப்பில் சிக்கி அவதியுற்று வருகின்றனர். சிலர், கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் பலியானதும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், இயக்குநர் வசந்தபாலனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

கொரோனா பாதித்துள்ள நிலையில், இயக்குநர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜி.வி. பிரகாஷின் ஜெயில் பட ரிலீசுக்கு காத்திருக்கும் இயக்குநர் வசந்தபாலன் அடுத்ததாக அர்ஜுன் தாஸை வைத்து புதிய படம் ஒன்றையும் இயக்கி வந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆயிரம் யானை பலம்

ஆயிரம் யானை பலம்

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். கொரோனா காரணமாக செல்போன் அழைப்புகளை எடுக்க முடியவில்லை என்றும், நண்பர்கள், மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது என பதிவிட்டுள்ளார்.

குதிரையை போல எழுந்து வருவேன்

குதிரையை போல எழுந்து வருவேன்

மேலும், கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைந்து, ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன் என்றும் இயக்குநர் வசந்தபாலன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் வசந்தபாலன் கொரோனாவில் இருந்து விரைவில் குணமாகி வீடு திரும்பவேண்டும் என்று ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X