Vasanthabalan: காஷ்மீரின் சூழல் & அரசியலை பேசாத அமரன் படம்.. இயக்குநர் வசந்தபாலன் கருத்து!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீஸ் ஆக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படத்தில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களத்தை கொடுத்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.
பயோ பிக்காக உருவாகியுள்ள அமரன் படம் உண்மை தன்மைக்கு நெருக்கமாக அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் இந்த படம் வழக்கம் போல காஷ்மீர் மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் வசந்தபாலன் அமரன் படம் குறித்த விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

அமரன் படம்: நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறதோ அதே அளவில் நெகடிவ் கமெண்ட்களையும் பெற்று வருகிறது. இந்த படம் காஷ்மீரின் உண்மையான சூழலையும் மக்களின் வாழ்க்கையையும் அங்குள்ள அரசியலையும் பதிவு செய்ய தவறிவிட்டதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீர் மக்களை தொடர்ந்து தீவிரவாதிகளாக காட்டும் படங்களின் வரிசையில் அமரன் படமும் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இயக்குனர் வசந்தபாலன் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
வசந்தபாலன் கருத்து: இந்த படத்தை வழக்கமான காஷ்மீர் தீவிரவாத மற்றும் ராணுவ படமாகவே நினைத்து பார்க்காமல் விட்டதாகவும் ஆனால் தொடர்ந்து இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த நிலையில் தீபாவளிக்கு ஊருக்கு சென்றிருந்த தான் இந்த படத்தை பார்க்க முயற்சித்ததாகவும் ஆனால் டிக்கெட்டுகள் கிடைக்காததால் கடந்த திங்கட்கிழமை சென்னை வந்த பின்பே படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் வசந்த பாலன் தெரிவித்துள்ளார். ஆனால் நினைத்ததற்கு மாறாக, இந்த படம் காஷ்மீர் மக்களின் வாழ்வியலையும் அந்த மக்களின் வாழ்க்கை சூழலையும் அங்குள்ள அரசியலையும் பதிவு செய்ய தவறிவிட்டதாக வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.
ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு: முன்னதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும் இதே கருத்தை பதிவு செய்திருந்தார். காஷ்மீரில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தீவிரவாதிகளாக சித்தரிப்பது போல அமரன் படம் அமைந்துள்ளதாக அவர் விமர்சித்திருந்தார். தற்போது வசந்தபாலனும் அந்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு அமரன் படத்தின் கதைக்களத்தை ராஜ்குமார் பெரியசாமி உருவாக்கியுள்ளார். ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் குழுவில் பணியாற்றியபோது கடந்த 2014ம் ஆண்டில் நடந்த ஒரு ஆபரேஷனில் இவர் உயிரிழந்திருந்தார்.
அமரன் எடிட்டர் விளக்கம்: அவருக்கு இந்து ரெபெக்கா வர்கிஸ் என்ற மனைவியும் மகளும் இருந்த நிலையில் இதை மையமாக வைத்தே கதைக்களத்தை ராஜ்குமார் பெரியசாமி உருவாக்கியிருந்தார். முன்னதாக இந்தப் படம் குறித்து பேசிய படத்தின் எடிட்டர், ஒவ்வொரு விஷயத்தையும் காட்சிப்படுத்த துவங்கினால் அதுவே நீண்ட நேரங்களை பிடிக்கும் என்று கூறியிருந்தார். ஒவ்வொரு காட்சியையும் மிகவும் சுருக்கமாகவும் அதே நேரத்தில் அந்தக் காட்சிக்கான டீடெய்லிங்குடனும் அமரன் படம் கொடுக்க முயன்றதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் இல்லாத விஷயங்களை வசந்தபாலன் குறிப்பிட்டுள்ளார்


Click it and Unblock the Notifications











