சந்திரமுகி 2 கதை இதுதான்.. ரகசியத்தை ஓப்பன் பண்ண இயக்குநர் பி. வாசு.. அப்போ சந்திரமுகி யாரு?

சென்னை: சந்திரமுகி 2ம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ள இயக்குநர் பி. வாசு அதன் கதை குறித்த ரகசிய தகவலை கசியவிட்டுள்ளார்.

Recommended Video

Chandramukhi 2 Massive Update | Raghava Lawrence | Anushka | Vadivelu

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, நாசர், வடிவேலு என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்த சந்திரமுகி கடந்த 2005ம் ஆண்டு வெளியானது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஓடிய சாதனையை சந்திரமுகி படைத்தது குறிப்பிடத்தக்கது.

சந்திரமுகி மேஜிக்

சந்திரமுகி மேஜிக்

மனோ தத்துவ முறையையும், பேய் கதையையும் ஒருங்கே இணைத்து கதை சொன்ன விதம் தான் இந்த படம் இத்தனை பெரிய ஹிட் அடிக்க காரணமாக இருந்தது. கங்கா கதாபாத்திரத்தில் ஜோதிகா அருமையாக நடித்து அசத்தியிருப்பார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைலும் கரிஷ்மாவும் தமிழில் இந்த படத்தை மிகப்பெரிய வெற்றியடைய செய்தது.

ரீமேக் படம்

ரீமேக் படம்

மலையாளத்தில் கடந்த 1993ம் ஆண்டு மோகன் லால், ஷோபனா நடிப்பில் மலையாள இயக்குநர் ஃபாசில் இயக்கிய மணிசித்ரத்தாலு படத்தை கன்னட மொழியில் 2004ம் ஆண்டு இயக்குநர் பி. வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார். அந்த படத்தில் விஷ்ணுவர்தன், செளந்தர்யா லீடு ரோலில் நடித்திருந்தனர். ஆப்தமித்ரா வெற்றியை தொடர்ந்து, தமிழில் ரஜினியை வைத்து சந்திரமுகி படத்தை இயக்கி பி.வாசு மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்தார்.

சந்திரமுகி 2

சந்திரமுகி 2

இந்நிலையில், சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்க பி. வாசு திட்டமிட்டு இருக்கிறார். சமீபத்தில், ராகவா லாரன்ஸும் அதனை தனது சமூக வலைதள பக்கங்களில் உறுதி செய்திருந்தார். இந்நிலையில், இரண்டாம் பாகம் முற்றிலும் வேறு பட்டு இருக்குமா? அல்லது அதன் தொடர்ச்சியாக இருக்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.

வாசு சொன்ன ரகசியம்

வாசு சொன்ன ரகசியம்

சந்திரமுகி 2 படத்தின் கதை குறித்த முக்கிய ரகசியத்தை இயக்குநர் பி. வாசு, சமீபத்தில் ஓப்பன் செய்திருக்கிறார். சந்திரமுகி படத்தில் வேட்டையன், சந்திரமுகி போர்ஷன் "ரா ரா" பாடலில் மட்டுமே காண்பிக்கப்பட்டு இருக்கும். இரண்டாம் பாகத்தில், சந்திரமுகிக்கும், வேட்டையனுக்கும் நடக்கும் பிரச்சனைகளும், சந்திரமுகி வேறு ஒரு பெண் உடலில் எப்படி நுழைகிறாள் என்பதையும் சொல்லப் போறாராம்.

சந்திரமுகி யார்?

சந்திரமுகி யார்?

சந்திரமுகியாக நடிகை ஜோதிகா தனது டாப் கிளாஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கண்ணை உருட்டி மிரட்டி நடிக்கும் அந்த அழகு, சந்திரமுகி படம் மாபெரும் வெற்றி பெற துணையாக நின்றது. இரண்டாம் பாகத்தில், சந்திரமுகியாக யார் நடித்தாலும், ஜோதிகா நடிப்புடனே கம்பேர் செய்யப் படுவார்கள்.

காஞ்சனா சீரிஸ்

காஞ்சனா சீரிஸ்

ராகவா லாரன்ஸ் காஞ்சனா சீரிஸ் படங்களை இயக்கியும் நடித்தும் வெற்றி கண்டுள்ளார். அதனால், பேய் படங்களில் நடிப்பது என்பது அவருக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான். மேலும், சூப்பர்ஸ்டாரின் ரசிகர் என்பதால், ரஜினியின் மேனரிஸம் அவருக்கு சரளமாக வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, ஆனால், சந்திரமுகியாக இந்த படத்தில் நடிக்கப் போகும் ஹீரோயினை வைத்துத் தான் படத்தின் வெற்றி முடிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சொதப்பல்

சொதப்பல்

கடந்த 2017ம் ஆண்டு சந்திரமுகி 2 படத்தை போன்றே சிவலிங்கா படத்தை பி. வாசு நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்கி இருந்தார். தான் இயக்கும் படங்கள் ராகவா லாரன்ஸுக்கு கை கொடுக்கும் அளவுக்கு மற்ற இயக்குநர்கள் படங்கள் லாரன்ஸுக்கு கை கொடுக்கவில்லை. ரித்திகா சிங் நாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்த படம் படு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X