Vijay: அப்டேட்ங்கற பேர்ல போஸ்டர் ரிலீஸ் செய்ய மாட்டேன்.. GOAT குறித்து பேசிய வெங்கட் பிரபு!

சென்னை: நடிகர் விஜய் அடுத்தடுத்து மாஸ் படங்களை கொடுத்து தன்னை இளைய தளபதியில் இருந்து தளபதியாக மாற்றம் செய்துள்ளார். சமீபத்தில் தன்னுடைய அரசியல் கட்சியின் அறிவிப்பை மேற்கொண்ட விஜய் தொடர்ந்து தளபதி 69 படத்துடன் தான் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் The greatest of all time படத்தின் அப்டேட்டை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் பண்டிகை தினங்களையொட்டி GOAT படத்தின் மிகப்பெரிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் மாஸ்கோவில் GOAT படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்திற்குள் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி வெங்கட் பிரபு மிகப்பெரிய அளவில் பட வேலைகளை தட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் GOAT படத்தின் அப்டேட் குறித்த வெங்கட் பிரபுவின் இந்த பேட்டி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. விரைவில் விஜய் படத்தின் முக்கியமான அறிவிப்பை அவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

Director Venkat prabhu assured about mass update of Vijay s The greatest of all time movie

நடிகர் விஜய்: நடிகர் விஜய், மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் The greatest of all time. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது மாஸ்கோவில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்களில் விஜய் நடித்து வருகிறார்.

இயக்குநர் வெங்கட் பிரபு: படத்தில் மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரியும் அப்பா விஜய்க்கு சினேகாவும் ஜோடியாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் சாங் சென்னையில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், உள்ளிட்டவர்கள் ஆட்டத்தில் எடுக்கப்பட்டது, இந்த படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் மாஸ்கோவில் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு மேல் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. GOAT படத்தின் ஷூட்டிங் அப்டேட்டை ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் தனது சமீபத்திய பேட்டியில் இயக்குனர் வெங்கட் பிரபு படத்தின் அப்டேட் குறித்து பேசியுள்ளார்.

வெங்கட்பிரபு அப்டேட்: படம் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வலிமையான படமாக உருவாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது 5 -6 நிறுவனங்களுடன் சிஜி வேலைகளில் தான் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ள விஎஃப்எக்ஸ் நிறுவனத்துடன் தான் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் எவ்வளவு காலங்களை எடுத்துக் கொள்ளும் என்பதை பொறுத்து ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தீர்மானிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வெறும் போஸ்டர்களை மட்டும் வெளியிட்டு படத்தின் அப்டேட் என்று கூறுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: வரும் பண்டிகை காலத்தையொட்டி படத்தின் மிகப்பெரிய அப்டேட்டை வெளியிட உள்ளதாகவும், அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது அரசியல் கட்சியை அறிவித்து முறைப்படி அரசியலில் தனது என்ட்ரியை பதிவு செய்துள்ளார் விஜய். மேலும் தளபதி 69 படத்துடன் தான் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் வெங்கட் பிரபுவுடன் விஜய் கூட்டணி அமைத்துள்ள The greatest of all time படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

தளபதி 69 படம்: தொடர்ந்து வரும் மார்ச் -ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட உள்ள தளபதி 69 படமும் அதிகளவில் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இளைய தளபதியிலிருந்து தளபதியாக கொண்டாடப்படுபவர் விஜய். அந்த வகையில் கலவையான விமர்சனங்களை அவரது படங்கள் பெற்றாலும் வசூலில் மிகப்பெரிய மாஸ் ஹிட் கொடுத்து வருகிறது. இந்நிலையில் சினிமாவில் இருந்து விலகும் விஜய்யின் முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X