வாய்க்கு வந்தபடி பேசாம… படத்தை பார்த்துட்டு பேசு…ப்ளு சட்டை மாறனை விளாசிய வெங்கட் பிரபு!

சென்னை : இயக்குனர் வெங்கட் பிரபு, ப்ளு சட்டை மாறனை பங்கமாக கலாய்த்து பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

Simbhu Fans-ஐ மேடையில் புகழ்ந்த Director Vnekat Prabhu | Maanadu Success Meet

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்து சிம்பு, எஸ்.ஜே. சூர்யா , கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானத் திரைப்படம் மாநாடு.

வெங்கட் பிரபு இயக்கி உள்ள இத்திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாநாடு

மாநாடு

சிம்புவின் அபரிமிதமான நடிப்பில், டைம் லூப் முறையில் தமிழில் முதன்முறையாக வெளியாகி உள்ள திரைப்படம் மாநாடு. நவம்பர் 25ந் தேதி வெளியான இத்திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

டைம் லூப் முறை

டைம் லூப் முறை

டைம் லூப் முறையில் மிகவும் சுவாரசியமாக வெளியாகி உள்ள இப்படம் சிம்புக்கு ஒரு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் வித்தியாசம் காட்டி மிரட்டி இருந்தார் சிம்பு. பலரும் இப்படத்தை பாராட்டினர்.

ப்ளு சட்டை மாறன்

ப்ளு சட்டை மாறன்

இந்நிலையில், இத்திரைப்படம் குறித்து பேட்டி அளித்த வெங்கட் பிரபு, படம் குறித்து பல சுவாரசியத் தகவலை பகிர்ந்து கொண்டார். அப்போது அவரிடம், பலரும் மாநாடு திரைப்படத்தை பாராட்டி வரும் நிலையில், ப்ளு சட்டை மாறன், மாநாடு திரைப்படத்தை விமர்சித்தது குறித்து கேட்கப்பட்டது.

படம் பார்த்து ரிவ்யூ செய்யவும்

படம் பார்த்து ரிவ்யூ செய்யவும்

இதற்கு பதிலளித்த வெங்கட்பிரபு, ப்ளு சட்டை மாறன், படம் பார்த்தாரா இல்லையா என்றே தெரியவில்லை, வேறு யாராவது சொல்லும் கதையை கேட்டு ரிவ்யூ பண்ணி விட்டார் போல. கதை என்ன வென்று தெரியாமலே உளறிக் கொண்டிருக்கிறார் என்றார். படத்தை ரிவ்யூ செய்யும் போது கட்டாயம் படத்தை பாருங்க என்று ப்ளு சட்டை மாறனை கடுமையாக விமர்சித்தார்.

பார்ட்டி

பார்ட்டி

ஜெய், சிவா, சத்யராஜ், ரெஜினா கசாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல நடிகர்கள் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கும் பார்ட்டி திரைப்படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்யும் முயற்சியில் இயக்குநர் வெங்கட் பிரபு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ரசிகர்களும் பார்ட்டி திரைப்படத்தை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X