Venkat Prabhu arrested: வெங்கட் பிரபு திடீர் கைது?.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்!
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் திடீரென தீயாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
சென்னை 600028, கோவா, சரோஜா, மங்காத்தா, மாநாடு படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் சினிமா வட்டாரத்தையும் அவரது ரசிகர்களையும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.

மாநாடு படத்தை முடித்த வெங்கட் பிரபு அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை படத்தை இயக்கினார். ஆனால், அடல்ட் கன்டென்ட் காமெடி படமான அந்த படம் மாநாடு படம் அளவுக்கு பெரிதாக போகவில்லை.
வெங்கட் பிரபு ஷூட்டிங் ஸ்பாட் என்றாலே படு ஜாலியாக இருக்கும் என அவரது படத்தில் நடித்த நடிகர்கள் எல்லாம் சொல்வது வழக்கம். நடிகர் அஜித்தே மங்காத்தா படத்தின் போது தான் கிரிக்கெட் எல்லாம் விளையாடி சிரித்து மகிழும் வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தன.
தொடர் தோல்விகளை சந்தித்து ரெட் கார்டு எல்லாம் வாங்கி ரொம்பவே விரக்தியாக இருந்த நடிகர் சிம்புவுக்கு செம கம்பேக் கொடுத்த மாநாடு படத்தையும் வெங்கட் பிரபு தான் இயக்கி இருந்தார்.
ஆரம்பத்தில் ஹாலிவுட் படமான டெனட் படத்தின் காப்பி என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டாலும், படம் வெளியான பின்னர், அவரது மேக்கிங் மற்றும் சிம்பு, எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தியேட்டர்களுக்கு சென்று அந்த படத்தை பார்க்க வைத்தது.

இந்நிலையில், திடீரென இயக்குநர் வெங்கட் பிரபு கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சில யூடியூப் சேனல்களில் திடீரென ஒரு தகவல் பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சற்றே விசாரித்துப் பார்த்ததில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா, க்ரித்தி ஷெட்டி நடிப்பில் கஸ்டடி எனும் படம் உருவாகி வருகிறது. விரைவில் அந்த படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்துக்கான ப்ரோமோஷன் ஸ்டன்ட்டாக இது இருக்கலாம் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
எல்லாத்தையும் வித்தியாசமாக செய்யும் வெங்கட் பிரபு இந்த விஷயத்தில் இப்படியொரு வெடிகுண்டு ப்ரோமோஷன் உடன் வந்துள்ளார். சமீபத்தில், வெளியான கஸ்டடி படத்தின் டீசரும் மிரட்டலாக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய நிலையில், படம் அடுத்த மாநாடாக தெறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











