கமல் பிறந்தநாளில் இவரை மறந்துட்டோமே… இன்று ’பார்ட்டி’க்கே பர்த்டே பார்ட்டி

சென்னை: இன்று இயக்குனர் வெங்கட் பிரபுவின் 43வது பிறந்தநாள்.

மனிதன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான். மகிழ்ச்சியான வாழ்வைத் தேடி ஓடும் பொழுதில் மகிழ்ச்சியை இழக்கிறான். இது ஒரு ஜென் தத்துவம்.

இந்த தத்துவத்தை பின்பற்றி சினிமா எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் வெங்கட் பிரபு. படம் எடுக்கிறோம் என்பதற்காக யாரையும் வருத்தாமல் எல்லோரும் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜாலியான படங்களையே பண்ணக்கூடியவர்.

ஆரம்பகாலம்

ஆரம்பகாலம்

இன்று 43வது பிறந்தநாளைக் கொண்டாடும் வெங்கட் பிரபு லண்டனில் கல்லூரி படிப்பை முடித்த பிறகு சொந்தமாக இசை பேண்ட் துவங்கி பாடகராக பயணத்தை துவங்கியவர். எஸ்.பிபி.சரண், பாடகர் யுகேந்திரன், தமன் மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோருடன் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். ஆரம்ப காலங்களில் மேடை நாடகத்தில் ஆர்வம் காட்டிய அவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் திரைப்படங்களிலும் நடிக்கத் துவங்கினார்.

மங்காத்தா

மங்காத்தா

சென்னை 28 திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த வெங்கட்பிரபுவுக்கு முதல்படமே நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்தது. பிறகு சரோஜாவில் சற்று சறுக்கினாலும், கோவா திரைப்படத்தில் தனக்கான ரூட்டைப் பிடித்துக்கொண்டார். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் அஜித்தை வைத்து மங்காத்தா இயக்கி, அதை மாபெரும் வெற்றிப்படமாக்கியதும் தமிழ்த் திரையுலகமே அசந்தது. முக்கியமாக சஸ்பென்ஸ் குறையாமல் அஜித்தின் ரசிகர் பட்டாளங்களுக்கு தீணி போடும் வகையில் திரைக்கதை அமைத்து ஜெயித்தார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

மங்காத்தாவுக்குப் பிறகு எடுத்த பிரியாணி திரைப்படத்தின் புரமோஷனில், 'மங்காத்தா லெவலுக்கு எதிர்பார்த்து வராதீங்க அப்படி வந்தால் நீங்க ஏமாந்துவிடுவீர்கள்' என பகிரங்கமாகவே சொன்னார். பிரியாணி அவ்வளவு டேஸ்டாக இல்லை என்றாலும், மாஸ் என்கிற மாசிலாமணி மற்றும் சென்னை 28 இரண்டாம் பாகம் என படங்கள் எடுத்து தன் இருப்பை காத்துக்கொண்டே இருக்கிறார்.

பொறுப்பு

பொறுப்பு

குடிக்காதீர்கள் என்று இளைஞர்களை சொல்ல மாட்டேன். பொறுப்போடு குடியுங்கள் என்றுதான் சொல்வேன் எனக் கூறும் வெங்கட் பிரபு, தற்போது பார்ட்டி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய பார்ட்டி கொடுக்க தயாராகி வருகிறார். இன்னும் பல பர்த்தேடே பார்ட்டிகளை வெற்றிகரமாக கொண்டாடவேண்டுமென அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X