GOAT: கோட் பட வெற்றி.. புதிய கார் வாங்கிய வெங்கட் பிரபு.. விலை எவ்வளவு தெரியுமா?
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் தி கோட். இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஜெய்ராம், சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி, மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியாகி முதல் நாளே ரூபாய் 126.32 கோடிகளை வசூல் செய்தது. இதுமட்டும் இல்லாமல், படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 288 கோடி வசூல் செய்தது. இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ்., நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு , தமிழ் சினிமாவில் தனக்கென தனிபாணியை உருவாக்கி, அதில் சிம்மசொப்பனம் அமைத்து அமர்ந்துள்ளார் என்றே கூறவேண்டும். லோ-பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் இவரது இயக்கத்தில், சென்னை -28, சரோஜா, கோவா போன்ற படங்களை பட்டியலிடலாம். அதுவே ஒரு மாஸ் ஹீரோவுக்கான தரமான படங்கள் என்றால், அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா, சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு ஆகிய படங்களைக் கூறலாம். அதேபோல் ஹை பட்ஜெட்டில் டெக்னிக்கலாக ஒரு படத்தை கை காட்டவேண்டும் என்றால், விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தினைக் கூறலாம்.

இப்படி, கமர்ஷியல் எலமெண்ட்ஸ்களை எப்போதும் மற்ற இயக்குநர்களைவிட, தனக்கான சினிமாவாக உருவாக்கியவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள தி கோட் படம், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது மட்டும் இல்லாமல், படத்தினைப் பார்த்த மற்ற நடிகர்களின் ரசிகர்களும் படத்தைக் கொண்டாடி தீர்த்தனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சியான் விக்ரம், அஜித் உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்களும் இந்தப் படத்தினைக் கொண்டாடும் வகையில் காட்சிகளை அமைத்திருந்தார் வெங்கட்.

ரசிகர்கள் மகிழ்ச்சி: இதுமட்டும் இல்லாமல், படத்தில் நடிகர் விஜயகாந்த் ஏ.ஐ., தொழில்நுட்பட்தை பயன்படுத்தி, படத்தில் நடித்துள்ளதைப்போல், காட்சி உருவாக்கப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் வரும் காட்சிதான் படத்தின் முதல் காட்சி என்பதால், கேப்டன் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டும் இல்லாமல், படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

கார்: படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விமர்சகர்கள் படத்திற்கு கலவையான விமர்சனங்களைக் கொடுத்தனர். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே லாபத்தினைக் கொடுத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறினார். இப்படியான நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றினை புதிதாக வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தக் காரினை கோட் படத்திற்காக வெங்கட் பிரபு வாங்கிய சம்பளத்தில் இருந்து வாங்கியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. மேலும் வெங்கட் பிரபு தற்போது வாங்கியுள்ள புதிய காரான, ரேஞ்ச் ரோவர் காரின் விலை சுமார் 86 லட்சங்கள் எனவும் கூறப்படுகின்றது.

சொந்தப் பணம்: அண்மைக் காலமாக தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் ஆனால் தயாரிப்பு நிறுவனம் படத்தின் இயக்குநருக்கு கார் பரிசளிப்பது வாடிக்கையாக இருந்து வருகின்றது. இந்நிலையில் தி கோட் படம் சூப்பர் ஹிட் படமாக மாறிய பின்னரும்கூட, வெங்கட் பிரபுவே தனது சொந்தப் பணத்தில் கார் வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











