வலிமை படம் என்னை ஏமாத்திடுச்சு... என்ன இப்படி சொல்லிட்டாரு மங்காத்தா இயக்குநர்!
சென்னை : நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை படத்தை இயக்கியிருந்தார் ஹெச் வினோத். தயாரித்திருந்தார் போனி கபூர். இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளான வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அஜித்தின் வலிமை
நடிகர் அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் வலிமை. இந்தப் படத்தை ஹெச் வினோ இயக்க, போனிகபூர் தயாரித்திருந்தார். இந்தக் கூட்டணி நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்திருந்தது.

கலவையான விமர்சனங்கள்
படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தின் நீளம் அதிகமாக இருந்தது, பைக் ரேசிங் காட்சிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருந்தது மற்றும் சென்டிமெண்ட்டும் தூக்கலாக இருந்தது என்பது போன்ற விமர்சனங்கள் படத்திற்கு கொடுக்கப்பட்டது. ஆயினும் படத்தில் அஜித்தின் நடிப்பு பரவலாக பாராட்டுக்களை பெற்றது.

சூப்பர் டூப்பர் ஹிட்
படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும், சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. வசூல்ரீதியாக சிறப்பாக அமைந்தது. வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே 34 கோடி ரூபாயை வசூல் செய்தது. சர்க்கார் படத்தின் வசூலை இந்தப் படம் முறியடித்தது. ஓட்டுமொத்தமாக 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதித்தது.

வலிமை திருப்தி தரவில்லை
இந்நிலையில் இந்தப் படம் தனக்கு போதிய திருப்தி தரவில்லை என்று பிரபல இயக்குநரும் அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கியவருமான வெங்கட் பிரபு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். படம் நன்றாக இருந்ததாகவும் ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை
ஆனால் ஹெச் வினோத்தின் முந்தைய படங்கள் ஏற்படுத்திய அதிகப்படியான எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்றும் தன்னை வலிமை படம் ஏமாற்றிவிட்டது என்றும் அவர் தற்போது தெரிவித்துள்ளார். வலிமை படம் ரிலீசானபோது தான் முதல் காட்சிக்கான டிக்கெட்டை வாங்கியதாக அவர் மிகுந்த உற்சாகத்துடன் ட்விட்டரில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

மங்காத்தா அஜித்
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜித் மங்காத்தா படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் அஜித்தை அவரது ரசிகர்களுக்கு வித்தியாசமாக அறிமுகப்படுத்தியது. படத்தில் ஸ்டைலிஷ்ஷான அஜித்தை பார்க்க முடிந்தது. படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்திருந்தார் த்ரிஷா.


Click it and Unblock the Notifications











