“மங்காத்தா 2“ கதை பற்றி யோசிக்கவே இல்லை… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வெங்கட்பிரபு !
சென்னை : மங்காத்தா இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அனைவருடைய எதிர்பார்ப்பும் மங்காத்தா இரண்டாம் பாகம் பற்றியே உள்ளது.
இயக்குநர் வெங்கட்பிரபு மங்காத்தா 2 குறித்து முக்கியமான தகவலை தெரிவித்துள்ளார்.

மங்காத்தா
வெங்கட்பிரபு இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் மங்காத்தா இத்திரைப்படத்தில் அஜித், அர்ஜூன், த்ரிஷா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, அஞ்சலி, பிரேம்ஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இத்திரைப்படம் மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்தது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாட்டு ஒவ்வொன்றும் தரமாக இருந்தது.

பஞ்ச் வசனம்
மங்காத்தா திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருப்பார். இப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. மங்காத்தா படத்தில், "நானும் எவ்ளோ நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது" என அஜித் பேசிய பஞ்ச் வசனம் இன்று வரை மாஸ் டயலாக்காகவே உள்ளது.

மங்காத்தா 2
மங்காத்தா திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடினர். மேலும், இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் மங்காத்தா இரண்டாம் பாகத்தை எப்போது எடுப்பீர்கள் என்று கேட்டு வந்தனர். இதையடுத்து, ஊடகங்களில், மங்காத்தா 2 விரைவில் உருவாக்க இருப்பதாகவும் அதில் அஜித்குமார், விஜய் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

யோசிக்கவே இல்லை
மங்காத்தா 2 குறித்து விளக்கம் அளித்துள்ள வெங்கட் பிரபு, கல்லூரி விழா ஒன்றில் மங்காத்தா 2 பற்றி கேட்டார்கள். அப்போது மங்காத்தா 2 திரைப்படத்தை இயக்கும் திட்டம் இருப்பதாக கூறினேன். மேலும், அஜித், விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் ஆசை இருக்கிறது என்றும் கூறியிருந்தேன். ஆனால், மங்காத்தா 2 படத்துக்கான கதை குறித்து இன்னும் யோசிக்கவே இல்லை என்றும், இது தொடர்பாக அஜித் மற்றும் விஜய்யை சந்தித்து பேசவில்லை என்றும் வெங்கட்பிரபு கூறியுள்ளார்.

ரசிகர்கள் கவலை
அஜித்தின் ரசிகர்கள் மங்காத்தா 2 குறித்து அப்டேட்டுகள் எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் வெங்கட்பிரபுவின் இந்த விளக்கத்தை கேட்டு ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











