தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்.. கங்கை அமரன் இப்போது எப்படி இருக்கிறார்?

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் உடல் நலக்குறைவு காரணமாக மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டேனியல் ராமசாமி மற்றும் சின்னத்தாயி அவர்களின் இளைய மகனான கங்கை அமரன் டிசம்பர் மாதம் 1947 ஆம் ஆண்டு பிறந்தார். இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் நடிகர் என பலத்திறமைகளை கொண்டவர் இயக்குநர் வெங்கட்பிரபு, பிரேம்ஜியின் தந்தை ஆவார். இவர் தனது அண்ணன் இளையராஜா இசையமைத்த பல படங்களில் பாடலாசிரியராக பணியாற்றினார். பின், எம். எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை இயற்றியுள்ளார். பாடல் ஆசிரியராக மட்டுமில்லாமல் மௌன கீதங்கள், வாழ்வே மாயம் போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

gangai amaran health

கரகாட்டக்கரன் : பிரபு நடித்த கோழி கூவுது படத்தை இயக்கி இயக்குநராக மாறிய கங்கை அமரன், ராமராஜன், கனகா நடித்த கரகாட்டக்காரன் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் பெயர் எடுத்தார். கிராமத்து மண் வாசனை மாறாத அந்த திரைப்படம், அதிக நாட்கள் தியேட்டரில் ஓடி வசூலை அள்ளியது. கங்கை அமரன் கடைசியாக தெம்மாங்கு பாட்டுக்காரன் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்திற்கு பிறகு மகன் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தார்.

தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்: 77 வயதான கங்கை அமரன் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மற்றும் மானாமதுரை சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை சென்ற போது, கங்கை அமரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில், தற்போது வேலம்மாள் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் பயப்படும் அளவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X