கோட் படத்தின் ரன்னிங் டைம்.. பல கெட்ட வார்த்தைகள்.. ஸ்ட்ரிக்ட்டாக கட் செய்த சென்சார் போர்ட்!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் அட்டகாசமாக உருவாகி உள்ள கோட் திரைப்படம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் சென்சார் போர்டு சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஜி.எஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. இதில், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ், யோகிபாபு என பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கி உள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, கோட் படத்துக்கு பாடல்களை எழுதியுள்ளனர்.

விஜய்யின் கோட்: தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியாக உள்ள இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு விதமான ரோலில் நடித்துள்ளார். இதில் அப்பா கதாபாத்திரத்திற்கு காந்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, மெர்சல், பிகில், லியோ ஆகியப் படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த விஜய் கோட் படத்திலும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. அந்த டிரைலரில் இளம் வயது விஜய், வயதான தோற்றத்தில் விஜய் என டிரைலரில் பல சர்ப்ரைஸ்கள் இருந்தன.
கவனம் பெற்ற இசை: அதுமட்டுமில்லாமல், இதுவரை ஹீரோவாக நம் மனதில் பதிந்து இருந்த நடிகர் மோகன். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அது படத்தில் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என தெரியவில்லை. மேலும், "காந்தி வேஷம் போட்டு பாத்திருப்ப. முதல் தடவ காந்தியே வேஷம் போட்டு பாக்குறேன்" போன்ற வசனம் கவனத்தை ஈரக்கும் வகையில் இருந்தது. ஆனால், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் பெரிதாக எடுபடவில்லை என கமெண்ட்டுகள் எழுந்தன.
இசைவெளியீட்டு விழா: கோட் படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், தி கோட் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடக்குமா இல்லையா என்பது குறித்து எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. ஆனால், டிரைலர் வெளியீட்டு விழாவின் போது செய்தியாளர்கள், இசைவெளியீட்டு விழா குறித்து கேட்ட போது, ஏஐ வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. மேலும், விஜய்யிடம் இதுகுறித்து பேசி இருக்கிறோம் அவர் தேதி கொடுத்த பிறகு இசைவெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று வெங்கட்பிரபு கூறினார்.
இந்நிலையில், தி கோட் படத்திற்கு சென்ஸார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 நிமிடம் 39 நொடிகள் என தெரியவந்துள்ளது.மேலும் படத்தில் இருந்த பல கெட்ட வார்த்தைகளும் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











