எவ்வளவு உயரத்திற்கு போனாலும் இயல்பை மாத்திக்காத குணம்... வெங்கட் பிரபு பாராட்டு யாருக்கு?

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதையொட்டி அவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். இன்றைய தினம் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ட்ரெண்டிங்கில் அயலான் படம்

ட்ரெண்டிங்கில் அயலான் படம்

அவரது அயலான் படமும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இன்றைய தினம் அவரது பிறந்தநாளையொட்டி அயலான் டீசர் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்படுகின்றனர். தொடர்ந்து டான் படத்தின் வெளியீடு குறித்த அப்டேட்டும் வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வெங்கட்பிரபு வாழ்த்து

வெங்கட்பிரபு வாழ்த்து

இன்றைய தினம் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி, ரசிகர்கள் அவரது பெயரில் கோயில்களில் அர்ச்சனை உள்ளிட்டவற்றையும் ஏற்பாடு செய்திருந்தனர். சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும்நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குணத்தை மாற்றிக் கொள்ளாதவர்

குணத்தை மாற்றிக் கொள்ளாதவர்

எவ்வளவு உயரத்திற்கு போனாலும் தன்னுடைய குணத்தை மாற்றிக் கொள்ளாதவர் சிவகார்த்திகேயன் என்று வெங்கட் பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த குணத்தை அப்படியே வைத்திருக்கவும் ரசிகர்களை தொட்ர்ந்து குஷியாக்கவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவா

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவா

வெங்கட்பிரபுவுடன் விரைவில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மன்மத லீலை படத்தை இயக்கிவரும் வெங்கட்பிரபு அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு அவர் சிவகார்த்திகேயனை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது டான் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனிடையே அயலான் படமும் போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டேஜில் உள்ளது. விரைவில் படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது இணைந்துள்ளார்.

Recommended Video

முத்தமிழ் கவியே With Anandhan Epi 01 | Vairamuthu’s Mazhai Kuruvi Explanation | OneIndia Tamil
கமல் தயாரிப்பில் சிவா

கமல் தயாரிப்பில் சிவா

மேலும் ராஜ்கமல் இன்டர்நேஷனலின் தயாரிப்பில் ரங்கூன் புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார் சிவா. இந்தப் படங்களை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி இணைந்தால் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X