Director Venkat prabhu: அஜித் -விஜய்யோட வொர்க் செய்ய ரொம்பவே பயந்தேன்.. வெங்கட் பிரபு சுவாரஸ்யம்!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. முன்னதாக அஜித்துடன் மங்காத்தா படத்தில் இணைந்து சிறப்பான வகையில் அந்தப் படத்தை கொடுத்திருந்தார். அஜித்தின் எவர்கிரீன் படங்களின் வரிசையில் மங்காத்தாவிற்கு கண்டிப்பாக முக்கியமான இடம் உண்டு. வெங்கட் பிரபு கேரியரிலும் முக்கியமான படமாக அமைந்தது மங்காத்தா. முன்னதாக இளம் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிவந்த வெங்கட் பிரபு இந்தப்படத்தின்மூலம் மாஸ் நடிகரான அஜித்துடன் இணைந்திருந்தார். படத்தையும் மாஸாக கொடுத்திருந்தார்.

அந்தவகையில் வெங்கட் பிரபு தற்போது விஜய்யையும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் சிறப்பாக வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மங்காத்தா படத்தில் வில்லன் ஷேடுடன் கூடிய அஜித்தை பார்த்த ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் உற்சாகம் கொண்டனர். சுவாரஸ்யமான திரைக்கதை, அதிகமான ஆர்ட்டிஸ்ட்கள், அவர்கள் அனைவரையும் சிறப்பாக பயன்படுத்திய காட்சி அமைப்புகள், யுவன் சங்கர் ராஜாவின் துள்ளலான பாடல்கள் என இந்தப் படம் மிகப்பெரிய கமர்ஷியல் பேக்கேஜாக அமைந்தது. வசூலிலும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

Director Venkat prabhu hails Vijay amp amp Ajith that they both are director s Artist

அஜித் -வெங்கட் பிரபு காம்பினேஷன்: நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு காம்பினேஷனில் வெளியான படம் மங்காத்தா. இந்த படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. படத்தில் வில்லன் ஷேடில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் நடித்திருந்தார், முன்னதாக வாலி படத்தில் வாய் பேச முடியாத காது கேட்காத வில்லனாக அவர் நடித்திருந்த நிலையில் மங்காத்தா படம் அவரது கேரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாக அமைந்தது, எப்போதும் தன்னுடைய கேங்குடன் இணைந்து என்டர்டைன்மெண்ட் படங்களாகவே கொடுத்து வந்த வெங்கட் பிரபுவிற்கும் மங்காத்தா படம் மிகச் சிறப்பாக அமைந்தது,

விஜய் -வெங்கட் பிரபு கூட்டணி: இந்நிலையில் தற்போது விஜய்யுடன் கூட்டணி அமைத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் அவர் பணியாற்றி வருகிறார். இந்த படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா மற்றும் வெங்கட் பிரபுவின் கேங் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் சூட்டிங் நிறைவு செய்யப்பட்டு தற்போது மாஸ்கோவில் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது அங்கு ஒரு மாத காலத்தில் ஷூட்டிங்கை நடத்தி முடிக்க வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

GOAT பட சூட்டிங்: GOAT படத்தின் அதிரடி ஆக்சன் காட்சிகளை மாஸ்கோவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது, இந்நிலையில் வெங்கட் பிரபு அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் மற்றும் விஜய் என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து செயலாற்றிய அனுபவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த வெங்கட் பிரபு, அஜித் மற்றும் விஜய் இருவரும் இயக்குனர்களின் பெஸ்ட் சாய்ஸ் நடிகர்கள் மற்றும் இருவரிடமும் இணைந்து பணியாற்றுவது மிகவும் சுலபம் என்று தெரிவித்துள்ளார், இவர்கள் இருவருடனும் இணைந்து பணியாற்ற துவக்கத்தில் தான் மிகவும் பயந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் -அஜித் குறித்து வெங்கட் பிரபு: ஆனால் தன்னை மட்டுமில்லாமல் படக்குழுவில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் மிகவும் கூலாக செயலாற்றும் படி அஜித் மற்றும் விஜய் இருவரும் செய்து விடுவார்கள் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார், அஜித் மற்றும் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியது குறித்து அவர் மிகுந்த உற்சாகத்தையும் பதிவு செய்துள்ளார், டைம் டிராவலை மையமாக கொண்டு உருவாகி வருகிறது விஜய்யின் GOAT படம். படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரலில் நிறைவடையவுள்ள நிலையில் ஆகஸ்ட் வெளியீடாக படம் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X