Vijay: தளபதிக்கு பெரிய ஹிட் கொடுத்தது சந்தோஷம்.. கோட் படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு உற்சாகம்

சென்னை: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கோட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூல் படங்களில் முதன்மை இடத்தை பிடித்துள்ள படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் இணைந்திருந்தனர்.

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து கோட் படத்தை உருவாக்கியிருந்தார் வெங்கட் பிரபு. இந்நிலையில் விஜய்யை வைத்து கோட் போன்ற மாஸ் படத்தை கொடுத்தது குறித்து வெங்கட் பிரபு தன்னுடைய தற்போதைய பேட்டியில் உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். கோலிவுட்டில் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களையும் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

vijay goat movie venkat prabhu

நடிகர் விஜய்: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கோட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது. இந்த படத்தின் காட்சி அமைப்புகள் மற்றும் ஏராளமான நடிகர் பட்டாளம் ரசிகர்களை கொண்டாட செய்தது. தனக்கே உரித்தான கலாட்டாக்களுடன் இந்த படத்தை இயக்கியிருந்தார் வெங்கட் பிரபு. அவரது கேங்கான பிரேம்ஜி, வைபவ், அரவிந்த் உள்ளிட்டவர்களும் இந்த படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

கோட் படம்: இவர்கள் மட்டுமில்லாமல் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன், திரிஷா உள்ளிட்டவர்களும் கேமியோ கேரக்டர்களில் நடித்திருந்தனர். விஜய் -திரிஷா காம்பினேஷனில் வெளியான பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டாட செய்தது. யுவன் சங்கர் ராஜா இசை இந்த படத்திற்கு சரியாக கை கொடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் இருந்தபோதிலும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக என்ஜாய் செய்ய வைத்தது. இந்நிலையில் இந்த படம் இந்த ஆண்டின் அதிகமாக வசூலித்த படங்களில் முதன்மை இடத்தை பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து வெங்கட் பிரபு தனது பேட்டியில் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு உற்சாகம்: தளபதி விஜய்க்கு தான் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள வெங்கட் பிரபு, படத்தின் இந்த வெற்றிக்கு தளபதி விஜய்தான் காரணம் என்றும் கூறியுள்ளார். படத்தில் எதை வேண்டுமானாலும் முயற்சிக்கலாம் என்ற சுதந்திரத்தை விஜய் தனக்கு கொடுத்ததாகவும் அதை தானும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டதாகவும் வெங்கட் பிரபு கூறியுள்ளார். மக்களும் படத்தை என்ஜாய் செய்த நிலையில் ஆல்டைம் ரெக்கார்டை படம் படைத்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார். தளபதிக்கு இதுபோன்ற ஒரு ஹிட்டை கொடுத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

மலேசியாவில் நம்பர் ஒன்: பெரிய நடிகர்களின் படம் ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யவில்லை என்றால் முதல் வாரத்தை தொடர்ந்து திங்கட்கிழமையில் இருந்து டிராப் ஆகிவிடும் என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார். இதைதாண்டி சர்வதேச அளவில் கோட் படம் மிகச்சிறந்த வகையில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் பெற்றுள்ளதாகவும் மலேசியாவில் ஆல்டைம் நம்பர் ஒன் இந்திய படமாக கோட் படம் மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தில்வாலே படத்தின் சாதனையை கோட் படம் முறியடித்துவிட்டதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X