Vijay 68 - விஜய் 68.. வெளியாகும் சீக்ரெட்ஸ் - உச்சக்கட்ட கோபத்தில் வெங்கட் பிரபு?

சென்னை: Vijay 68 (விஜய் 68) விஜய் 68 படம் பற்றிய தகவல்கள் வெளியாகிவருவதால் இயக்குநர் வெங்கட் பிரபு தனது உதவி இயக்குநர்களுக்கு ஒரு ஆர்டரை போட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். அனிருத் இசையமைப்பில் லலித் தயாரித்துவருகிறார். த்ரிஷா, சஞ்சய் தத், மாத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் நடந்துவருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

விஜய்யின் அடுத்த படம்: லியோ படத்தை முடித்த பிறகு விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்தது. விஜய்யை அடுத்தது தெலுங்கு இயக்குநர் இயக்குவார் என்றும் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் தகவல் வெளியானது. ஆனால் சூப்பர் குட் பிலிம்ஸ் ஓகேதான் தெலுங்கு இயக்குநருடன் மீண்டும் தளபதி விஜய் இணைவதில் தங்களுக்கு உடன்பாடில்லை என ரசிகர்கள் கூறினர்.

director Venkat Prabhu has placed an order to his assistant directors for Vijay 68

வெங்கட் பிரபு- விஜய்: இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களாக விஜய் படத்தை அடுத்து யார் இயக்கப்போகிறார் என்று கோலிவுட்டில் ஒரு ஹாட் டாபிக் ஓடிக்கொண்டிருந்தது. வெங்கட் பிரபு விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் என்று வெளியான அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தின் லைனை கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் வெங்கட் பிரபு சொல்லிவிட்டதாகவும் அதனை இப்போது விஜய் டிக் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தீவிர டிஸ்கஷன்: இதனையடுத்து வெங்கட் பிரபு தனது உதவி இயக்குநர்களுடன் தீவிரமான டிஸ்கஷனில் இருக்கிறார். அஜித்துக்கு எப்படி மங்காத்தா படத்தை கொடுத்து கோலிவுட்டில் பெயர் எடுத்தாரோ அதேபோல் விஜய்க்கு இந்தப் படத்தின் மூலம் மெகா ஹிட்டை கொடுத்து மீண்டும் மாஸ் இயக்குநராக வலம் வர வேண்டும் என்பதி வெங்கட் பிரபு இருக்கிறார்.

கட்டுப்பாடு: இந்தச் சூழலில் படத்தில் ஜோதிகா நடிக்கவிருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதனால் வெங்கட் பிரபு ரொம்பவே டென்ஷன் ஆகி தனது உதவி இயக்குநர்களை அழைத்து உங்களில் யாரோ ஒருவர் மூலம்தான் இது லீக்காகியிருக்கிறது. எனவே இனி யாரும் வீட்டுக்கு போகக்கூடாது அலுவலகத்திலேயே தங்கிவிடுங்கள் என ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அவருமே வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே வீட்டுக்கு போவதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

விஜய் சம்பளம் எவ்வளவு: இதற்கிடையே, ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக விஜய்யிடம் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதில் தயாரிப்பு தரப்பே விஜய்க்கான சம்பளத்தை 175 கோடி ரூபாயிலிருந்து ஆரம்பித்ததாக கூறப்பட்டது. அதேபோல் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு10 கோடி ரூபாய் சம்பளத்தை தர முன் வந்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X