அப்துல் காலிக்காக சிம்பு.. வெங்கட் பிரபுவின் பிறந்தநாள் கிஃப்ட்.. வெளியானது மாநாடு போஸ்டர்!
Recommended Video
சென்னை: நடிகர் சிம்புவின் மாநாடு படம் குறித்த முக்கிய அறிவிப்பை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க, படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது.
மாநாடு படத்தின் பூஜை மற்றும் படப்படிப்பு தொடங்கப்பட்டது. தொடங்கிய வேகத்திலேயே படப்பிடிப்பு நின்றது. படத்தில் இருந்து சிம்பு நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.

படத்தின் வேலைகள்
இதனை தொடர்ந்து சிம்புவின் தாயார் படக்குழுவிடம் பேசி மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து மீண்டும் சிம்பு நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. நடிகர் சிம்பு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டதால் அவர் மலைக்கு சென்று திரும்பிய பிறகு படத்தின் வேலைகள் தொடங்கும் எனற அறிவிக்கப்பட்டது.

விஹவுஸ் புரடெக்ஷன்ஸ்
இந்நிலையில் மாநாடு படத்தை பிரபல தயாரிப்பாளர் பரதன் தனது பரதன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளதாகவும், இந்தப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மகத் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடெக்ஷன்தான் இப்படத்தை தயாரிக்கிறது என தெரியவந்துள்ளது.

தயாரான ரசிகர்கள்
நடிகர் சிம்பு இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனால் காலை முதலே பல்வேறு வாழ்த்து ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டிங்கில் இருந்தன. இந்நிலையில் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கவுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு இன்று இரவு 8 மணிக்கு என ஒற்றை வரியில் டிவிட்டியிருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் அது சிம்புவின் மாநாடு படம் குறித்த அப்டேட்டாகத்தான் இருக்கும் என கொண்டாட்டத்திற்கு தயாராகினர்.

அப்துல் காலிக்காக..
இந்நிலையில் மாநாடு படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபு சொன்னப்படி சரியாக 8 மணிக்கு படம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மாநாடு படத்தின் போஸ்டர்தான் அது. போஸ்டரில் சிலம்பரசன் அப்துல் காலிக்காக மாநாடு என இடம்பெற்றுள்ளது. மேலும் தைரியத்தை விட பெரிய அச்சுறுத்தல் எதிரிக்கு எதுவும் இல்லை - அப்துல் காலிக் என்ற வாசகமும் இடம் பெற்றிருக்கிறது.
மை டியர் பிரதர்
நடிகர் சிம்புவின் பிறந்த நாள் பரிசாக இயக்குநர் வெங்கட் பிரபு இந்த போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டரை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்தன. ரசிகர்கள் ரீடிவிட்டும் செய்து வருகின்றனர். இந்த போஸ்டருடன் பிறந்த நாள் வாழ்த்துகள் மை டியர் பிரதர் என்று குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.


Click it and Unblock the Notifications











