சூப்பர் டூப்பர் வெற்றி கொடுத்த மாநாடு இயக்குநர்... 4 மடங்கு சம்பளத்தை உயர்த்திட்டாராம்

சென்னை : நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் ரிலீசாகி 100 கோடி க்ளப்பில் இணைந்துள்ள படம் மாநாடு.

இந்தப் படத்தை பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். டைம் லூப் பாணியில் படம் வெளியானது.

இந்நிலையில் இந்தப் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றி வெங்கட் பிரபுவின் சம்பளத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநாடு படம்

மாநாடு படம்

நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி ரிலீசான படம் மாநாடு. இந்தப் படம் டைம் லூப் பாணியில் வெளியானது. இந்த வித்தியாசமான முயற்சியில் சிறப்பான திரைக்கதையுடன் களமிறங்கியிருந்தார் வெங்கட் பிரபு.

நவம்பர் ரிலீஸ்

நவம்பர் ரிலீஸ்

இந்தப்படம் முன்னதாக தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பந்தயத்தில் இருந்து பின்வாங்கியது. விநியோகஸ்தர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார்.

பிளாக்பஸ்டர் வெற்றி

பிளாக்பஸ்டர் வெற்றி


இதையடுத்து அந்த மாதத்தின் இறுதியில் வெளியான இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. சிம்புவுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு பிளாக்பஸ்டர் வெற்றியை இந்தப் படம் கொடுத்துள்ளது. இதையடுத்து அவரது மார்க்கெட்டும் கணிசமாக உயர்ந்துள்ளது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்களில் மட்டுமின்றி அடுத்தடுத்த படங்களிலும் அவர் கமிட்டாகி வருகிறார். அவரது மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது. அவருக்கு வேல்ஸ் பல்கலைகழகம் டாக்டர் பட்டத்தையும் கொடுத்துள்ளது.

வெங்கட் பிரபு மகிழ்ச்சி

வெங்கட் பிரபு மகிழ்ச்சி

இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியடைந்துள்ளவர்களில் மற்றொருவர் இயக்குநர் வெங்கட்பிரபு. அவரது இயக்கத்தில் அடுத்ததாக மன்மதலீலை படம் உருவாகி வருகிறது. விரைவில் இந்தப் படமும் ரிலீசுக்கு தயாராகிவருகிறது.

ஜாலியான இயக்குநர்

ஜாலியான இயக்குநர்

எப்போதுமே இளைஞர் பட்டாளத்தை வைத்து ஜாலியாக படத்தை இயக்கிவரும் வெங்கட் பிரபு இந்தப் படத்தையும் அதே வகையில் இயக்கிவருகிறார். மாநாடு படத்திலேயே அவருக்கு 4 கோடி ரூபாய் சம்பளமாம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அவர் கணிசமாக தன்னுடைய சம்பளத்தை குறைத்ததாக கூறப்படுகிறது.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு


இந்நிலையில் இந்தப் படத்தின் அதிரி புதிரி வெற்றியால் அவருக்கு சம்பளத்தில் கணிசமாக உயர்வு காணப்படுகிறது. அவரை புக் செய்ய தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழில் அவரது அடுத்த படத்திற்கு 7 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

தெலுங்கு படத்திற்கு ரூ.15 கோடி

தெலுங்கு படத்திற்கு ரூ.15 கோடி

இதேபோல தெலுங்கில் அவர் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இந்தப் படங்களின் வெற்றியை அடுத்து அவரது சம்பளம் மேலும் உயரக்கூடும் என்று கூறப்பட்டுளளது.

முன்னணி நடிகர்கள் ஆர்வம்

முன்னணி நடிகர்கள் ஆர்வம்

அஜித், சிம்பு உள்ளிட்டவர்களை இயக்கி முடித்துள்ளார் வெங்கட் பிரபு. இந்தப் படங்கள் மட்டுமின்றி சென்னை 28 உள்ளிட்ட படங்களும் இவருக்கு சிறப்பாக கைகொடுத்துள்ளது. இந்நிலையில் இவரது படங்களில் நடிக்க முன்னணி நடிகர்களும் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X