பிரேம்ஜிய பார்த்தா பொறாமையா இருக்கு... தம்பிய பத்தி வெங்கட் பிரபு ஏன் இப்படி சொன்னாரு?

சென்னை : டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு படம் அவருக்கு சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்துள்ளது.

Recommended Video

Sila Nerangalil Sila Manidhargal Review | Yessa ? Bussa ?|Ashok Selvan|Manikandan|Vishal Venkat

கதை சிறப்பாக அமைந்தால் விஜய்யை வைத்து தான் படமெடுக்க ஆவலுடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளர்.

மேலும் தனது தம்பி பிரேம்ஜியை பார்த்து பொறாமையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இயக்குநர் வெங்கட்பிரபு

இயக்குநர் வெங்கட்பிரபு

இயக்குநர், நடிகர் என பல தளங்களிலும் கலக்கி வருகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. அவரது சமீபத்திய வெளியீடான மாநாடு படம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படம் சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்துள்ளது. எளிதாக 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்துள்ளது.

மன்மதலீலை படம்

மன்மதலீலை படம்

இந்தப் படத்தையடுத்து அவர் தற்போது அசோக் செல்வன் நடிப்பில் மன்மதலீலை படத்தை எடுத்து வருகிறார். அடுத்ததாக தெலுங்கு படத்தையும் எடுக்கவுள்ளார். மாநாடு படத்தின் வெற்றியை அடுத்து இவரது மார்க்கெட் வேல்யூ அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

யூத்புல் கதைக்களம்

யூத்புல் கதைக்களம்

எப்போதும் இவரது கதை யூத்புல்லாக இருக்கும். அந்த வகையில் மன்மதலீலை படமும் சிறப்பான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ளது. தனது முந்தைய கதைகயை போல இல்லாமல் இந்தப்படம் மாறுபட்ட கதையுடனும் சிறப்பான திரைக்கதையுடனும் இருக்கும் என்று அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தளபதியை இயக்க ஆவல்

தளபதியை இயக்க ஆவல்

இந்நிலையில் தளபதிக்காக சிறப்பாக கதை அமைந்தால் அவரை வைத்து தான் படமியக்க ஆவலுடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவரை கவரும் வகையில் கதை அமைய வேண்டும் என்றும் அவர் இதுவரை செய்யாத மாறுபட்ட கதையுடன் அவரை அணுக வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தம்பியை பார்த்து பொறாமை

தம்பியை பார்த்து பொறாமை

இதனிடையே, பிரேம்ஜி அமரனின் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தங்களுடைய கேங்கில் அனைவரும் திருமணம் முடித்துள்ள நிலையில் பிரேம்ஜி மட்டும் திருமணம் செய்யாமல் ஜாலியாக உள்ளது தனக்கு பொறாமையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்கேப் ஆகும் பிரேம்ஜி

எஸ்கேப் ஆகும் பிரேம்ஜி

அவரை திருமண பந்தத்தில் மாட்டி விட தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் இருந்து அவர் தொடர்ந்து எஸ்கேப் ஆகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் செட்டில் ஆக வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X