D3 டீமோட ஜாய்ன் ஆன டைரக்டர் வெங்கட் பிரபு.. எப்படீன்னு பாருங்க!

சென்னை : அறிமுக இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் பிரஜன் நாயகனாக நடித்துள்ள படம் D3.

ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்த டீமுடன் தற்போது பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்துள்ளார்.

நடிகர் பிரஜின்

நடிகர் பிரஜின்

நடிகர் பிரஜன் தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். சரியான வாய்ப்பு கிடைக்காத ஹீரோக்களில் இவரும் ஒருவராக காணப்படுகிறார். ஆனாலும் அவ்வப்போது இவரது படங்கள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் வாய்ப்புக்காக மெனக்கெட்டு வருகிறார்.

டி3 படம்

டி3 படம்

இந்நிலையில் பிரஜன் நாயகனாக நடித்து அறிமுக இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் உருவாகிவருகிறது D3. படத்தில் வித்யா பிரதீப் நாயகியாக நடித்துள்ளார். சார்லி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படத்தில் வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வித்தியாசமான கதை

வித்தியாசமான கதை

பீமாஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்ஷன்ஸ் சாமுவேல் காட்சன் இருவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இத்தகைய சிறப்பாக கதைக்களங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்தப் படமும் சிறப்பான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

த்ரில்லான கதை

த்ரில்லான கதை

இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு குற்றாலத்தில் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை மிகவும் த்ரில்லாகவும் விறுவிறுப்பாகவும் எடுத்துள்ளதாக படத்தின் இயக்குநர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதித்த சூட்டிங்

கொரோனாவால் பாதித்த சூட்டிங்

இந்தப் படப்பிடிப்பின்போது சென்னை வந்த வர்கீஸ் மேத்யூவிற்கு விமான நிலையத்திலேயே கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதன் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போனதாக இயக்குநர் மேலும் கூறினார். மேலும் குற்றாலத்தில் மழை காரணமாகவும் அடிக்கடி சூட்டிங் கேன்சலானதையும் அவர் குறிப்பிட்டார்.

டைட்டில் லுக்கை வெளியிட்ட வெங்கட் பிரபு

டைட்டில் லுக்கை வெளியிட்ட வெங்கட் பிரபு

இவ்வளவு இடையூறுகளுக்கிடையில் இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். படத்திற்கு ஸ்ரீஜித் எடவானா என்பவர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் லுக்கை தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Ponniyin Selvan Teaser... பெரிய கோவிலில் பிரம்மாண்டம் *Kollywood | Filmibeat Tamil
இருமொழி படத்தை இயக்கும் வெங்கட் பிரபு

இருமொழி படத்தை இயக்கும் வெங்கட் பிரபு

தற்போது நாக சைத்தன்யா, கிருத்தி ஷெட்டி நடிப்பில் என்சி 22 படத்தின் சூட்டிங்கை துவக்கியுள்ளார் வெங்கட் பிரபு. இந்தப் படம் தமிழ், தெலுங்கில் இருமொழிப் படமாக ரிலீசாக உள்ளது. இந்நிலையில், மற்ற படங்களின் பிரமோஷன்களிலும் வெங்கட் பிரபு இணைந்து வருவது சிறப்பானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X