வெங்கட்பிரபுவின் அடுத்த பட அப்டேட்… ஹீரோ… ஹீரோயின் யாருன்னு தெரியுமா !
சென்னை : வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது .
காதல், காமெடி மற்றும் ரொமான்ஸ் கதை அம்சத்தைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்க உள்ளார்.
இதில், மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாநாடு
இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு படத்தை இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவுன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.

பணிகள் முடிந்தன
இந்நிலையில் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதால் , இப்படத்தின் முதல் சிங்கிள் எப்போது ரிலீஸாகும் என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொரோனாவின் நிலைமை சரியான பிறகே வெளியிடப்படும் என சமீபத்தில் அறிவித்திருந்தார்.

ஹீரோ
இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதில், ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் என நடிகைகள் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும், அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மற்ற நடிகர், நடிகையர் விவரம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைக்கிறார்
ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மற்றும் பிளாக் டிக்கெட் என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்க உள்ளன. இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்க உள்ளார். ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











