அன்புக்கு நன்றி மக்களே… மாநாடு இயக்குநரின் வேற லெவல் ட்வீட்
சென்னை : நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் ரிலீசாகியுள்ளது மாநாடு படம்.
இந்தப் படம் வெளியான 4 நாட்களில் விநியோகஸ்தர்களுக்கு சிறப்பான வசூலை பெற்றுத் தந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் இந்த வசூல் குறித்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.

மாநாடு படம்
நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி கடந்த 25ம் தேதி நீண்ட போராட்டங்களுக்கு பின்பு திரையரங்குகளில் ரிலீசான படம் மாநாடு. இந்தப் படத்திற்கு முன்னதாக அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட்டது.

சிறப்பான வரவேற்பு
ஆயினும் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. தீபாவளி ரேசிலிருந்து பின்வாங்கினாலும் சில தினங்களுக்கு முன்பு குறிப்பிட்டபடி படம் ரிலீசானது. இந்நிலையில் படம் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிறப்பான வசூல்
கடந்த 4 நாட்களில் படத்தின் வசூல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. வெளியிடப்பட்ட அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் அதிகமான அளவில் சென்று படத்தை பார்த்து வருகின்றனர். டைம் லூப் பாணியில் இந்தப் படம் ரிலீசாகியுள்ள நிலையில், வெங்கட் பிரபுவின் இயக்கத்திற்கே உரிய தனித்துவம் படத்தில் காணப்படுகிறது.

சுரேஷ் காமாட்சி மகிழ்ச்சி
அவரது முந்தைய படங்களான மங்காத்தா உள்ளிட்ட படங்களில் இருந்து இந்தப் படம் சிறப்பான வகையில் அமைந்துள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் வசூல் குறித்த அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். குறிப்பாக படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பும் பாராட்டிற்கு உள்ளாகி வருகிறது.
Recommended Video

ரஜினிகாந்த் வாழ்த்து
தொடர்ந்து அனைத்து தரப்பினரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தொலைபேசி மூலம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து எஸ்ஜே சூர்யா மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.

வெங்கட் பிரபு மகிழ்ச்சி
இந்நிலையில் கடந்த 4 நாட்களில் தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் அனைவரும் லாபத்தை பார்த்துவருவது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் வசூல்மழை பொழிந்து வருவது குறித்தும் அவர் மகிழ்ந்துள்ளார்.

மக்களின் அன்பிற்கு நன்றி
மக்களின் இந்த அன்பிற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். கடவுள் மிகவும் கருணையானவர் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, அவரின் இந்த ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள ராதிகா சரத்குமார், வாழ்த்துக்களையும் அவர் இதற்கு தகுதியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











