Director Venkat prabhu: விரைவில் தளபதி 68 அப்டேட்.. ரசிகர்களை கூல் செய்த வெங்கட் பிரபு!
சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டிலேயே விஜய்யின் வாரிசு மற்றும் லியோ படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளன. இதனிடையே கடந்த இரு மாதங்களாக தளபதி 68 படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்துள்ள நிலையில், தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சிறிய இடைவெளி விடப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் மீண்டும் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 68 படத்தின் டைட்டில் புத்தாண்டையொட்டி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாகவே 28ம் தேதி படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது படத்தில் தந்தை -மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துவருகிறார். படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நடிகர்கள் கமிட்டாகியுள்ள நிலையில், படம் கலர்புல் காம்பினேஷனாக உருவாகி வருகிறது.

நடிகர் விஜய்: வாரிசு, லியோ படங்கள் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அதிகமான வசூலை இந்தப் படங்கள் ஈட்டியுள்ளன. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம், அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியானது. இந்தப் படத்தின் வசூல் 600 கோடிகளை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே தளபதி 68 படத்தில் விஜய் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் அவரது சம்பளம் 200 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
விஜய் -வெங்கட்பிரபு கூட்டணி: இதையடுத்து இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அஜித்திற்கு மங்காத்தா என்ற அதிரிபுதிரி வெற்றியை கொடுத்துள்ள வெங்கட் பிரபு, சமீபத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு என்ற சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்துள்ளார். டைம் லூப் ஜானரில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் திரைக்கதையை மிகவும் கவனமாக மேற்கொண்டிருந்தார். இதனிடையே அடுத்தடுத்த கலாட்டா படங்களை கொடுத்துள்ள வெங்கட் பிரபு, விஜய்யை தன்னுடைய படத்தில் எப்படி பயன்படுத்தியுள்ளார் என்று அறிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிகமான ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.
விரைவில் தளபதி 68 அப்டேட்: சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுபவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இந்நிலையில் இன்றைய தினம் அவர் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தளபதி 68 படத்தின் அப்டேட்களை விரைவில் எதிர்பாருங்கள் என்றும் ரசிகர்களுக்கு இனிப்பான அப்டேட்டை கொடுத்துள்ளார். பண்டிகை நாட்களை மிகவும் சிறப்பாக என்ஜாய் செய்யுங்கள் என்றும் அன்பை பகிருங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். படத்தின் டைட்டில் புத்தாண்டையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது வெங்கட்பிரபுவும் அதை உறுதிப்படுத்தும் வகையில் ட்வீட் செய்துள்ளது ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது.
மிரட்டலாக உருவாகியுள்ள பர்ஸ்ட் சிங்கிள்: முதல் முறையாக இந்தப் படத்தின்மூலம் விஜய் -வெங்கட் பிரபு கூட்டணி இணைந்துள்ளது. படத்தில் வைபவ் உள்ளிட்ட வெங்கட்பிரபுவின் கூட்டணியும் இணைந்துள்ளது. முன்னதாக தன்னுடைய பிரமோஷனுக்காக பேசிய வைபவ், படத்தில் முதல் சிங்கிள் மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ளதாக கூறியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு இநத்ப் படத்தின்மூலம் யுவன் சங்கர் ராஜாவும் தளபதி படத்தில் இணைந்துள்ளார். அவரது இசையில் படத்தின் பிஜிஎம் உள்ளிட்டவை மிகச்சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











