Venkat prabhu: கோட் படத்தில் விஜய்யை வேற மாதிரி காட்டியிருக்கேன்.. வெங்கட்பிரபு உற்சாகம்!
சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளது.
இதையடுத்து படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நாளைய தினம் படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாக உள்ள நிலையில் ரிலீசுக்கு இரு வாரங்களுக்கு முன்னதாக படத்தின் டிரைலர் வெளியாகும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் இரு பாடல்கள் முன்னதாக லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் நாளைய தினம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாக உள்ளது. முன்னதாக இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
3வது சிங்கிள்: இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் 3வது சிங்கிளுக்கான பிரமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ள நிலையில் படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ளார். விஜய்யின் மகன் கேரக்டருக்காக அவருக்கு டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யை வேறு மாதிரிகாட்டியுள்ளதாக வெங்கட் பிரபு தனது பேட்டியொனறில் கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு உற்சாகம்: அவரை மாறுபட்ட கோணத்தில் காட்ட விரும்பியதாகவும் மற்றபடி இந்த கேரக்டர் ரசிகர்களை கவருமா என்பதை படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் தான் கூற வேண்டும் என்றும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இதனிடையே படத்தின் ட்ரெயிலர் படத்தின் ரிலீசுக்கு இரு வாரங்களுக்கு முன்னதாக வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தளபதி 68 மற்றும் தளபதி 69 படங்களுடன் தன்னுடைய சினிமா கேரியரை நிறைவு செய்யவுள்ளர் விஜய். இதனால் கோட் மற்றும் தளபதி 69 படங்கள் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளன. அதிலும் அடுத்ததாக வெளியாகவுள்ள கோட் படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகளை படக்குழுவினர் ஏற்படுத்தி வருகின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசை: யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தின் நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் விஜய் வாய்சிலேயே வெளியாகியிருந்தன. இந்நிலையில் நாளைய தினம் படத்தின் 3வது பாடல் யுவன் சங்கர் ராஜா வாய்சில் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள நிலையில் தமிழில் இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார் பிரபல இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன்.


Click it and Unblock the Notifications











