ராஜதுரை படத்தை முன்னமே பார்த்திருந்தா விஜய்யின் கோட் இன்னும் நல்லா வந்துருக்கும்.. வெங்கட்பிரபு கலகல

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கொண்டாட செய்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அதிகமான நட்சத்திரப் பட்டாளங்களுடன் இந்தப் படம் ரிலீசான நிலையில், படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இருந்த போதிலும் படத்தின் ஒட்டுமொத்த வசூல் சர்வதேச அளவில் 455 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

விஜய்யின் இறுதிப்படமான தளபதி 69 படத்தின் சூட்டிங் கடந்த 6ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் பாடல் காட்சியுடன் நடந்து முடிந்துள்ளது. இறுதிப்படங்களின் வரிசையில் கோட் படமும் இடம்பெற்ற நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது. டீ ஏஜிங் செய்யப்பட்ட விஜய்யின் தோற்றம் முதலில் கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்தது.

vijay goat movie venkat prabhu

நடிகர் விஜய்: நடிகர் விஜய் எப்போதுமே மாஸான ஹீரோவாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருபவர். விஜய் என்ற ஆளுமை தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை கடந்து நடைபோட்டு வருகிறது. ஹீரோவாக மட்டுமே 30 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில் விஜய்யின் இறுதிப்படமான தளபதி 69 படத்தின் சூட்டிங் இம்மாதத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது. கடந்த 6ம் தேதி இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் விரைவில் திட்டமிடப்பட உள்ளது. இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார்.

கோட் படம்: முன்னதாக விஜய்யின் 68வது படமாக கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது கோட் படம். வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்தப் படம் வெளியான நிலையில் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்திருந்த நிலையில், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்பட்டது. ரசிகர்களை இந்தப் படம் மிகப்பெரிய அளவில் கவர்ந்த நிலையிலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

ராஜதுரை படம்குறித்து வெங்கட் பிரபு: இருந்தபோதிலும் இந்தப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் 455 கோடி என படத்தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் கதைக்களம் ஹாலிவுட் படத்தின் தழுவல் என்றும் தமிழிலேயே முன்னதாக ராஜதுரை என்ற படம் இந்தப் படத்தின் சாயலில் ரிலீசாகியுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து தற்போது வெங்கட் பிரபு தன்னுடைய கலந்துரையாடல் ஒன்றில் பேசியுள்ளார். கோட் படத்தின் ரிலீசுக்கு பிறகே தனக்கு ராஜதுரை படம் குறித்து தெரியவந்ததாகவும் உடனடியாக தான் அந்தப்படத்தை பார்த்ததாகவும் வெங்கட்பிரபு கூறியுள்ளார்.

கோட் படம் பெட்டராக வந்திருக்கும்: முன்னதாகவே தனக்கு விஷயம் தெரிந்திருந்தால் ராஜதுரை படத்தை தான் முன்னதாகவே பார்த்திருப்பேன் என்றும் கோட் படத்தை இன்னும் பெட்டராகவே எடுததிருக்கலாம் என்றும் வெங்கட் பிரபு கலகலப்பாக பேசியுள்ளார். அப்பா vs மகன் என்பது ஒரு யூனிவர்சல் ஸ்கிரிப்ட் என்று கூறியுள்ள வெங்கட் பிரபு, சர்வதேச அளவில் பல படங்களை பார்த்தே கோட் படத்தை உருவாக்கியதாகவும் சீக்ரெட்டை பகிர்ந்துள்ளார். ஆனால் ராஜதுரை படத்தை தான் எப்படி மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும்அவர் கூறியுள்ளார்.

சினிமா அதிகமாக கற்றுக் கொடுக்கும்: சினிமா நமக்கு அதிகமான விஷயங்களை கற்றுக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ள வெங்கட் பிரபு, காதல் படத்தின் கதைக்களம் அந்த இயக்குநருக்கு டிரெயினில் பக்கத்தில் அமர்ந்திருந்த நபரால் பகிரப்பட்டதை குறிப்பிட்டுள்ளார். அந்த கதையை பகிர்ந்தவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அதனால் ஒரு படத்திற்கான கதைக்கரு நமக்கு எங்கிருந்தும் கிடைக்கலாம். சிறுகதை மூலமாகவும் ஒரு படத்திற்கான கதைக்களம் அமையலாம் என்றும் வெங்கட்பிரபு இந்த உரையாடலில் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X