மாரி செல்வராஜ், பா ரஞ்சித் மாதிரி என்னால படங்கள் பண்ண முடியாது.. இயக்குநர் வெங்கட்பிரபு ஓபன்!
சென்னை: இயக்குநர் வெங்கட்பிரபு அடுத்தடுத்த படங்களின்மூலம் கவனத்தை ஈர்த்து வருபவர். நடிகராகவே இவர் தன்னுடைய கேரியரை துவங்கிய நிலையில், சில படங்களில் ஹீரோவாகவும் இவர் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் சென்னை 28 போன்ற படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் விஜய், பிரஷாந்த், பிரபு தேவா உள்ளிட்டவர்களை லீட் கேரக்டர்களில் இணைத்து கோட் படத்தை இயக்கியிருந்தார் வெங்கட்பிரபு. இந்தப்படம் விமர்சனரீதியாக வெற்றிகரமாக அமையவில்லை என்றபோதிலும் படம் வசூல்ரீதியாக சிறப்பாகவே கைக்கொடுத்துள்ளது. இந்த ஆண்டின் சிறப்பான வசூல் படமாக கோட் படம் அமைந்துள்ளது.

விஜய்யின் கோட் படம்: சமீபத்தில் விஜய்யின் கோட் படத்தை இயக்கியிருந்தார் வெங்கட்பிரபு. இந்தப் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்திருந்தார். மகன் கேரக்டர் நெகட்டிவ் ஷேடில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில் விஜய்யின் அந்த கேரக்டரையும் ரசிகர்கள் என்ஜாய் செய்யவே செய்தனர். படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உளிளட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். பிரேம்ஜி, வைபவ், அரவிந்த் என தன்னுடைய கேங்கையும் இந்தப் படத்தில் வெங்கட் பிரபு இணைத்திருந்தார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
வெங்கட்பிரபுவின் அடுத்தப்படம்: இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படம்குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அடுத்ததாக சத்யஜோதி பிலிம்சின் தயாரிப்பில் வெங்கட்பிரபு படமியக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஹீரோ உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே அஜித்தின் படத்தை இயக்கும் தனது விருப்பத்தையும் தனது சமீபத்திய பேட்டியில் வெங்கட்பிரபு வெளிப்படுததியுள்ளார். முன்னதாக அஜித்தின் மங்காத்தா படத்தை இவர் இயக்கியிருந்த நிலையில், இவர்களின் கூட்டணி மீண்டும் இணைவது குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுததி வருகின்றனர்.
அஜித் ஏற்படுத்திய மாற்றம்: இதனிடையே தான் மங்காத்தா படத்தை இயக்கவில்லை என்றால், தன்னுடைய நண்பர்களை சுற்றியே தான் படங்களை உருவாக்கியிருப்பேனோ என்று தோன்றுவதாக வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். முன்னதாக மங்காத்தா படத்தையும் அவர்களை வைத்தே தான் யோசித்ததாகவும் பணம் எப்படி நண்பர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதாவே தான் மங்காத்தாவை யோசித்து வைத்ததாகவும் ஆனால் இந்தக் கதையில் அஜித் நுழைந்ததால் அனைத்துமே மாறியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர்களை போல படமியக்க முடியாது: பெரிய ஹீரோவை வைத்து படமியக்கினாலும் மாரி செல்வராஜ், பா ரஞ்சித் போன்றவர்கள் தங்களது ஸ்டைலிலேயே படமியக்குவதாகவும் ஆனால் ஆனால் தன்னால் அப்படி படமியக்க முடியாது என்றும் வெங்கட் பிரபு கூறியுள்ளார். தான் இயக்கும் படங்களில் தன்னுடைய தாக்கமும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் அவர்களை அவரது ரசிகர்கள் கொண்டாடும்வகையிலும் தான் கதைக்களத்தை யோசிப்பேன் என்றும் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











