GOAT Trailer: காந்தினு பெயர் வைத்தா குடிக்கக்கூடாதா? வெங்கட் பிரபு விளக்கம்!

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர், நடிகர் விஜய். இவர் நடிப்பில் தி கோட் திரைப்படம் உருவாகியிருக்கும் நிலையில், இப்படத்தில் இருந்து டிரைலர் சற்று முன் வெளியாது. இதைத்தொடர்ந்து நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் வெங்கட் பிரபு படம் குறித்து பல விஷயத்தை கூறியுள்ளார்.

.ஜி.எஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. இதில், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ், யோகிபாபு என பல திரை நட்சத்திரங்கள் நடித்தள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

GOAT Vijay trailer venkat prabhu

கோட் திரைப்படம்: பல நாட்களாக மக்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த 'தி கோட்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலரில், மங்காத்தா, போக்கிரி, கில்லி அனைத்து படத்தையும் ஒன்றாக கலந்து பார்த்தது போல, கலவையாக இருந்தது. கோட் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமா மட்டுமே இல்லாமல் குடும்ப செண்டிமெண்ட், ஜாலி, சேட்டை என கலக்கலாக இருக்கும் என்பது சினேகா பேசிய வசனத்தில் இருந்து தெரிய வருகிறது. மேலும், டிரைலரில் அப்பாவா வரும் விஜய் காந்தி என பெயர் வைத்து இருப்பதும். அவர் குடித்துவிட்டு அலப்பறை செய்வது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

வெங்கட்பிரபு: இந்நிலையில் டிரைலர் வெளியீட்டை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபுவிடம், படத்தில் விஜய்க்கு காந்தி என பெயர் வைத்து, அவர் குடிப்பது போல காட்சி வைத்து இருப்பது சரியா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு காந்தினு பெயர் வெச்சி இருந்தா, சரக்கு அடிக்கக்கூடதா? எனக்கு காந்தினு ஒரு நண்பன் இருக்கான் அவன் என்னென்ன அட்டகாசம் பண்ணுவான் தெரியுமா. படத்தில் வரும் பெயர் ஏன் நீங்கள் மகாத்மா காந்தியோட ஒப்பிட்டு பேசுகிறீர்கள். இது ஒரு தவறான முன் உதாரணம் என்றார்.

இனிமே குடிக்கவே மாட்டேன்: அதைத்தொடர்ந்து, மற்றொரு செய்தியாளர்,டிரைலரில் இனிமே குடிக்கவே கூடாது என்று மங்காத்தா படத்தில் அஜித் பேசும் வசனம் வருகிறதே. இது அஜித் ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காக வைத்த வசனமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அவர், அந்த வசனத்தை அஜித்தை நான் தான் பேச வைத்தேன், இதில் விஜய்யை பேச வைத்து இருக்கிறேன் என்று பதில் அளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X