Venkat prabhu: அஜித் என்மேல கோவமா இருக்காரு.. ஐ அம் வெயிட்டிங்.. வெங்கட் பிரபு ஓபன்!

சென்னை: நடிகர் அஜித், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் இறுதி கட்டமாக பாடல் காட்சியின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ள நிலையில் வரும் ஜனவரியில் பொங்கல் ரிலீசாக இந்தப்படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து கோடை கொண்டாட்டமாக அஜித்தின் குட் பேட் அக்லி படமும் ரிலீசாகவுள்ளது. இந்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் நிறைவு செய்யவுள்ள அஜித், அடுத்ததாக எந்த இயக்குநருடன் இணைவார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ajithkumar venkat prabhu

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி படம் வரும் ஜனவரியில் பொங்கலையொட்டி திரையரங்குகளில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஆண்டில் அஜித்தின் துணிவு படம் ரிலீசான நிலையில் இரண்டு ஆண்டுகள் கழிந்து அவரது அடுத்த படம் ரிலீசாக உள்ளது. அவரது படத்தின் ரிலீஸுக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்த ரசிகர்களை கூல் செய்யும் வகையில் அவரது அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக குட் பேட் அக்லி படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ரிலீசாக உள்ளது.

காத்திருக்கும் வெங்கட் பிரபு: இந்த இரண்டு படங்களுமே ஏறக்குறைய நிறைவு கட்டத்தில் உள்ள நிலையில் அடுத்ததாக அஜித் எந்த இயக்குநருடன் இணைவார் என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு அல்லது இயக்குநர் சிவாவுடன் அஜித் இணைவாரா என்று கேள்வி எழும்பியுள்ளது. இதனிடையே அடுத்ததாக கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அஜித் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அஜித்துடன் இணைந்து மங்காத்தா என்ற அதிரி புதிரி வெற்றியை கொடுத்த வெங்கட் பிரபு தற்போது கொடுத்துள்ள பேட்டியில் மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்துடன் இணைய காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அஜித் கோபம்: மங்காத்தா படத்தை தொடர்ந்து அஜித்தை இயக்க பல வாய்ப்புகள் கிடைத்ததாகவும் ஆனால் தன்னுடைய மற்ற படங்களின் கமிட்மெண்ட்ஸ் காரணமாக அவற்றை ஏற்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அஜித் தன் மீது கோபமாக இருப்பார் என்று தெரிவித்துள்ள வெங்கட் பிரபு, ஆயினும் அவருடன் இணைந்து படம் இயக்க தான் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த விருப்பம் நிறைவேறி மங்காத்தா போன்ற அஜித்தின் கேரியர் பெஸ்ட் படம் மீண்டும் கிடைத்தால் நல்லது தான்.

அஜித் -வெங்கட் பிரபு கூட்டணி?: சமீபத்தில் விஜய்யுடன் வெங்கட் பிரபு இணைந்து வெளியான கோட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அஜித்துடன் இணையும் இயக்குநர்கள் ஒரு படத்துடன் நிற்கமாட்டார்கள். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்குவார்கள். சிவா, ஹெச் வினோத் போன்றவர்கள் இதற்கு உதாரணங்களாக உள்ள நிலையில், மங்காத்தா போன்ற ஒரு சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த வெங்கட் பிரபு மீண்டும் அஜித்துடன் இணையவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X