Venkat Prabhu On Leo - லியோ அப்படிப்பட்ட படமாக இருக்கும்.. பலிக்குமா வெங்கட் பிரபுவின் ஆரூடம்?

சென்னை: Venkat Prabhu on Leo (லியோ பற்றி வெங்கட் பிரபு) லியோ அனைத்து மொழிகளிலும் கவனிக்கப்படும் படமாக இருக்கும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார்.

மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு கஸ்டடி படத்தை இயக்கியிருக்கிறார். நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்துக்கு இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்திருக்கின்றனர். பைலிங்குவலாக உருவாகவிருக்கும் இப்படம் நாக சைதன்யாவுக்கு முதல் தமிழ் படமாக அமைந்திருக்கிறது.

Director Venkat Prabhu opens up about Leo Movie

கஸ்டடி ட்ரெய்லர்: கஸ்டடி படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. போலீஸ் சப்ஜெக்ட்டாக உருவாகியிருக்கும் இப்படம் 80களில் நடப்பது போன்று இருக்கும் என ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதேசமயம் இந்தப் படம் வித்தியாசமான படம் எல்லாம் இல்லை பாட்டி வடை சுட்ட கதைதான் என்று வெங்கட் பிரபு ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்துக்கது.

லியோ குறித்து வெங்கட் பிரபு: இந்தச் சூழலில் படத்தின் புரோமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெங்கட் பிரபுவிடம் நெறியாளர், தமிழ் திரையுலகம் ஏன் பெரிய அளவிலான பான் இந்தியா படத்தை கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு வெங்கட் பிரபு, "பார்வையாளர்களுக்காக தமிழ் படைப்பாளிகள் படம் எடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நிச்சயம் லியோ படம் அனைத்து மொழிகளிலும் கவனிக்கப்படும் படமாக இருக்கும்" என்றார்.

உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் லியோ: வரிசையாக நான்கு படங்களை ஹிட்டாக கொடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படமாக உருவாகிவருகிறது லியோ. லோகேஷ் கனகராஜ் இப்போது ஒரு பிராண்ட் ஆகிவிட்டதால் அவருக்கென்று தனி மார்க்கெட் உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை பெற்ற படமாக லியோ படம் இருக்கிறது. மேலும், விஜய் கடைசியாக நடித்த பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் தோல்வியடைந்திருப்பதால் லியோ விஜய்க்கு முக்கியத்துவம் உள்ள படமாக கருதப்படுகிறது.

Director Venkat Prabhu opens up about Leo Movie

ஷூட்டிங் அப்டேட்: காஷ்மீரில் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை பிரசாத் ஸ்டூடியோ மற்றும் பையனூரில் லியோ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவந்தது. தற்போது ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டிருப்பதாகவும் அங்கு ஷூட்டிங் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த செட்டில் முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகள் எடுக்கப்படவிருப்பதாக தெரிகிறது.

ஷூட்டிங்கில் அர்ஜுன், மன்சூர் அலிகான்: லியோ படத்தில் அர்ஜுன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இவர்களில் மன்சூர் அலிகானும், அர்ஜுனும் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளாமல் இருந்தனர். இந்தச் சூழலில் இரண்டு பேரும் நேற்று முதல் ஷூட்டிங்கில் பங்கேற்றிருக்கின்றனர். லியோவில் அர்ஜுனின் கெட் அப் வேறு மாதிரி இருக்கும் எனவும். இதுவரை தமிழில் யாரும் அந்த கெட் அப்பில் தோன்றவில்லை என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X