Maanaadu :வெங்கட் பிரபுவை பார்த்து வியந்து பாராட்டிய விஜய்.. என்ன காரணத்துக்காக தெரியுமா?
சென்னை : நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான மாநாடு படம் மிகச்சிறந்த வெற்றியை பெற்றது.
டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பலதரப்பட்ட ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. சிம்புவிற்கு இந்தப் படம் சிறப்பான கம்பேக்கை கொடுத்தது.
இந்தப் படம் வெங்கட் பிரபுவின் கேரியரிலும் பெஸ்ட்டாக அமைந்த நிலையில், தற்போது நாக சைத்தன்யாவை இயக்கி வருகிறார்.

மாநாடு படத்தை பாராட்டிய விஜய் : நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியானது மாநாடு. சிம்புவிற்கு கண்டிப்பாக ஒரு கம்பேக் தேவைப்பட்ட நேரத்தில் மிகச்சிறப்பான வெற்றியை இந்தப் படம் தேடித் தந்தது. டைம் லூப் பாணியில் மிகவும் சேலஞ்சிங்கான படத்தை கொடுத்து மிகச்சிறந்த வெற்றியை இந்தப் படத்தின் மூலம் பெற்றார் இயக்குநர் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபுவின் படங்களில் அதிகமான காமெடி, ஜாலி போன்றவை இருக்கும். ஆனால் இந்தப் படம் சயின்ஸ் பிக்ஷனை மையமாக கொண்டு வெளியானது.
படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. படத்திற்கு மிகச்சிறப்பான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், படம் 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது. மிகுந்த பிரச்சினைகளுக்கிடையில் தடைகளை தகர்த்து வெளியான இந்தப் படம் சிம்புவிற்கு சிறப்பான கம்பேக்கை கொடுத்தது. தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களை வெற்றிப் படமாக்கியுள்ளார் சிம்பு.

முதல் நாளிலேயே இந்தப் படம் சர்வதேச அளவில் 10 கோடி ரூபாய் வரையில் வசூலித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படம் பல்வேறு தரப்பிலிருந்தும் சிம்பு மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு தொடர்ந்து பாராட்டுக்களை பெற்றுத் தந்தது. படத்தில் சிம்புவிற்கு போட்டியாக எஸ்ஜே சூர்யாவும் அதகளம் செய்திருந்தார். இந்த காம்பினேஷன் சிறப்பாக வொர்க் அவுட் ஆன நிலையில், படமும் சூப்பர் ஹிட்டானது.
இந்தப் படத்தில் நடித்ததற்காக சிம்புவிற்கு சிறந்த நடிகருக்கான சைமா விருதும் கிடைத்தது. அதேபோல இந்தப் படத்தில் நடித்த எஸ்ஜே சூர்யாவிற்கும் சிறந்த வில்லனுக்கான சைமா விருது கிடைத்தது. படத்திற்காக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்த நிலையில், நடிகர் விஜய் தன்னிடம் தொலைபேசி மூலம் பேசி, பாராட்டியது குறித்து சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய வெங்கட் பிரபு ரசிகர்களிடையே பகிர்ந்துக் கொண்டார்.

நடிகர் விஜய் தன்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாகவும் மாநாடு படத்திற்காக பாராட்டு தெரிவித்ததாகவும் வெங்கட் பிரபு மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த ஐடியாவை எப்படி திரைப்படமாக கொண்டு வந்தீர்கள் என்று விஜய் வியப்பாக கேள்வி கேட்டதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்காக பலரும் பாராட்டு தெரிவித்த போதிலும், விஜய்யின் இந்தப் பாராட்டு தனக்கு அதிகமான உற்சாகத்தை கொடுத்ததாகவும் வெங்கட் பிரபு குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











