மாநாடு 100 வது படமா...யாருக்கு?...வெங்கட் பிரபு வெளியிட்ட எமோஷனல் ட்வீட்
சென்னை : தமிழ் சினிமாவில் ஹிட் பட டைரக்டர்களில் வெங்கட் பிரபுவும் ஒருவர். சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களை தந்தவர். பல படங்களில் கேரக்டர் ரோலிலும் கலக்கி உள்ளார்.
தற்போது சிம்பு- கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள மாநாடு படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட படமாக, அதிக எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள படமாக உள்ள மாநாடு படத்தின் ஃபோஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

அக்டோபர் மாதம் மாநாடு
அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு வெளியிடப்பட உள்ள இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜ் இசையமைத்துள்ளார்.

பிரவீனை வாழ்த்திய வெங்கட் பிரபு
மாநாடு படத்தின் எடிட்டிங் வேலைகளை பிரவீன் கேஎல் தான் கவனித்து வருகிறார். இவர் வெங்கட் பிரபுவின் பல படங்களில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் இவரை பாராட்டி ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு.

100 வது படம் மாநாடு
அதில், நாம் இருவரும் சேர்ந்தே தனது தொழிலை துவக்கினோம். இப்போதும் வலுவாக இணைந்திருக்கிறோம். மாநாடு படம் 100 வது படம் என்பதை அறிவிப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். சென்னை 28 முதல் படம், மாஸ் 50 வது படம், இப்போது மாநாடு 100 வது படம். இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்ற கடவுள் அருள் புரியட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை வெற்றி படங்களா
வெங்கட் பிரபுவின் படங்கள் மட்டுமின்றி ஆரண்ய காண்டம், கந்தசாமி, காவியத் தலைவன், மெட்ராஸ், கபாலி, மகரிஷி, பைரவா, தோழா உள்ளிட்ட பல ஹிட் படங்களில் பணியாற்றி உள்ளார் பிரவீன். தற்போது 100 வது படமாக மாநாடு படத்தில் பணியாற்றி உள்ளார்.


Click it and Unblock the Notifications











