நயன்தாராவின் சூப்பர் த்ரில்லர் படம்.... ட்ரெயிலரை வெளியிடும் பிரபல டைரக்டர்

சென்னை : நடிகை நயன்தாராவின் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த படம் நிழல்.

இந்தப் படம் தற்போது மாய நிழல் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

இந்நிலையில் நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். அவரது மார்க்கெட் எப்போதும் ஏறுமுகமாகவே இருக்கிறது. பெண்களை மையப்படுத்திய கேரக்டராக இருந்தாலும் ஹீரோவுடன் டூயட் பாடுவதாக இருந்தாலும் இவரது நடிப்பு தனித்துவமாக காணப்படுகிறது.

 அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இவரது நடிப்பில் தமிழில் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதேபோல பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இவர் இணைந்துள்ள லயன் படமும் எதிர்பார்ப்பில் உள்ளது. அட்லி இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

 நயன்தாராவின் நிழல் படம்

நயன்தாராவின் நிழல் படம்

இந்தப் படங்களை தவிர்த்து அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் நயன் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மலையாளத்தில் வெளியான படம் நிழல். படத்தில் குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடித்திருந்தார். குழந்தையை மையமாக கொண்டு வெளியான இந்தத் த்ரில்லர் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நயன்தாராவிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

தமிழில் மாய நிழல்

தமிழில் மாய நிழல்

இந்நிலையில் இந்தப் படம் தமிழில் மாய நிழல் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் நாளை விஜயதசமியையொட்டி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த ட்ரெயிலரை பிரபல டைரக்டர் வெங்கட் பிரபு வெளியிட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெங்கட்பிரபுவின் மாநாடு

வெங்கட்பிரபுவின் மாநாடு

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் தற்போது சிம்புவின் மாநாடு படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. தீபாவளி ரேசில் அண்ணாத்த, வா டீல் உள்ளிட்ட படங்கள் உள்ள நிலையில் மாநாடு படமும் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் பாடல் மற்றுட் ட்ரெயிலர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X