தியேட்டர்ல படத்தை செல்போன்ல படம் பிடிக்காதீங்க… வெங்கட்பிரபு வேண்டுகோள்

சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாநாடு.

கடந்த 25ம் தேதி வெளியாகி இந்தப் படம் சிற்பபான வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தை திரையரங்குகளில் பார்க்க வரும் ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

மாநாடு படம்

மாநாடு படம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்ஜே மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இந்தப் படம் கடந்த 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் தற்போது சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. 3 தினங்களிலேயே வசூல் ரீதியில் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் இந்த வெற்றி முன்னதாகவே எதிர்பார்க்கப்பட்டது.

வெற்றி குறித்து எதிர்பார்ப்பு

வெற்றி குறித்து எதிர்பார்ப்பு

வெங்கட் பிரபுவின் முந்தைய படங்கள் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்தப் படமும் அதே ரீதியில் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை தற்போது இந்தப் படம் பூர்த்தி செய்துள்ளது. இதை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தார். படம் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும் சிறப்பான வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிறப்பான வெற்றி

சிறப்பான வெற்றி

தற்போது படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் எஸ்ஜே சூர்யா, சிம்புவின் நடிப்பிற்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. படத்தின் திரைக்கதைக்காக வெங்கட் பிரபுவும் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார். படத்தை பார்க்கும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

வெங்கட் பிரபு வேண்டுகோள்

வெங்கட் பிரபு வேண்டுகோள்

இதனிடையே மாநாடு படத்திற்கு ரசிகர்கள் காட்டும் அதீத அன்பிற்கு நன்றி என்று இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மொபைல் போனில் படத்தின் காட்சிகளை படம்பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது ஒரு குற்றச் செயல் என்றும் திரையரங்குகளில் மட்டுமே சினிமா அனுபவத்தை அனைவரும் அனுபவிப்போம் என்றும் அவர் கோரியுள்ளார்.

Recommended Video

என் தலைவன் வேற Level | Maanadu பார்த்த Srinidhi பயங்கர Excited Video
டைம் லூப் படம்

டைம் லூப் படம்

டைம் லூப் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து அவருக்கு சிவகார்த்திகேயன், ஆர்கே சுரேஷ் உள்ளிட்டவர்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தனது பாராட்டுக்களை தொலைபேசி மூலம் எஸ்ஜே சூர்யாவிற்கு தெரிவித்துள்ளார். இது தனது வாழ்க்கையில் சிறப்பான தருணம் என்று எஸ்ஜே சூர்யாவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X