For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிம்புவின் மாநாடு டிரைலர்... வெங்கட் பிரபு வெளியிட்ட சரவெடி அப்டேட்

  |

  சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அரசியல் த்ரில்லர் படமான இதை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் லீட் ரோலில் நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  சிம்பு முதல் முறையாக இஸ்லாமிய இளைஞர் ரோலில் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மாநாடு படம், ரஜினியின் அண்ணாத்த ரிலீசாகும் தீபாவளி நாளான நவம்பர் 4 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே மாநாடு படம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கும் நிலையில், ரஜினியுடன் மோதும் சிம்பு படம் என்பதால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  டிரைலரே வராது மா...உளறிய வெங்கட் பிரபு...அதிர்ந்து போன ரசிகர்கள் டிரைலரே வராது மா...உளறிய வெங்கட் பிரபு...அதிர்ந்து போன ரசிகர்கள்

  3 ஆண்டுகள் போராட்டம்

  3 ஆண்டுகள் போராட்டம்

  மாநாடு படம் பற்றிய அறிவிப்பு 2018 ம் ஆண்டே போஸ்டருடன் வெளியிடப்பட்டது. அதற்கு பிறகு பல காரணங்களால் படத்தின் வேலைகள் துவங்கப்படாமல் இருந்தது. அதற்கு பிறகு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு 2019 ம் ஆண்டின் பிற்பகுதியிலேயே மாநாடு படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட்டது. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக மீண்டும் படத்தின் ஷுட்டிங் நிறுத்தப்பட்டது.

  பிப்ரவரியில் டீசர் ரிலீஸ்

  பிப்ரவரியில் டீசர் ரிலீஸ்

  இந்நிலையில் மாநாடு படத்தின் டீசர் 2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இது சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி, அனைவரிடமும் படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. அரசியல் கலந்த ஆக்ஷன், த்ரில்லர் படம் என்பதால், படத்தின் கதை என்னவாக இருக்கும் என ஆர்வம் எழுந்தது. அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் சிம்பு மீது தனி ஈர்ப்பை ஏற்படுத்தியது.

  தள்ளி போன ரிலீஸ் தேதி

  தள்ளி போன ரிலீஸ் தேதி

  இந்த படத்தை மே 14 ம் தேதி ரம்ஜான் தினத்தன்று ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிட்டனர். ஆனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதாலும், கொரோனா இரண்டாம் அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதாலும் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு ஆயுத பூஜைக்கு படம் ரிலீசாகும் என கூறப்பட்ட நிலையில், தீபாவளி ரிலீஸ் என செப்டம்பர் 11 ம் தேதி அறிவித்தனர்.

  வெங்கட் பிரபுவின் மாஸ் போஸ்ட்

  வெங்கட் பிரபுவின் மாஸ் போஸ்ட்

  இந்நிலையில், மாநாடு டிரைலர் வருது, வருது என்று தான் ரொம்ப நாளா சொல்றீங்களே தவிர எப்போ வருதுன்னு ஒரு தேதியை சொல்ல மாட்டுறீங்களே என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்ததால், அக்டோபர் மாதம் 2 ம் தேதி மாநாடு டிரைலர் ரிலீஸ் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதற்கிடையில் மாநாடு டிரைலர் ரிலீஸ் தொடர்பான மற்றொரு மாஸ் அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டராக வெளியிட்டுள்ளார் டைரக்டர் வெங்கட் பிரபு.

  இவங்க தான் ரிலீஸ் பண்றாங்க

  இவங்க தான் ரிலீஸ் பண்றாங்க

  வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மாநாடு டிரைலரை மலையாள சூப்பர் ஹீரோ நிவின் பாலி, கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி, தெலுங்கு ஹீரோ நானி, டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் ட்விட்டரில் வெளியிட போகிறார்களாம். மாநாடு படம் 5 இந்திய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், 4 வெவ்வேறு மொழி பிரபலங்களை வைத்து டிரைலரை ரிலீஸ் செய்ய போகிறார்களாம்.

  மீண்டும் 9 சென்டிமென்ட்

  மீண்டும் 9 சென்டிமென்ட்

  இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் அக்டோபர் 2 ம் தேதி காலை சரியாக 11.25 மணிக்கு மாநாடு டிரைலர் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தான். சிம்புவின் லக்கி நம்பர் 9. அதனால் அவரின் படம் பற்றிய வெளியீடுகள் அனைத்தும் 9 என்ற நம்பரை மையப்படுத்தி தான் வெளியாகும். இந்த சென்டிமென்ட் அவரது முதல் படத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறதாம். அதை 9 சென்டிமென்டை பின்பற்றியே மொத்த கூட்டுத்தொகை 9 வர வேண்டும் என்பதற்காக 11.25 மணிக்கு டிரைலரை ரிலீஸ் செய்ய போகிறார்கள்.

  English summary
  Recently Maanaadu producer Suresh Kamatchi revealed that the trailer of this movie will come out on october 2nd. yesterday director Venkat prabhu revealed that nivin pauly, rakshit shetty, nani, a.r.murugadoss are going to release maanaadu trailer at 11.25 am.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X