தெலுங்கில் கலக்கல் காம்பினேஷன்... அடுத்ததாக எந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குறாருன்னு பாருங்க!

சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் படங்களை இயக்கி வருகிறார். இவரது மாநாடு படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை அடுத்து நாளைய தினம் இவரது மன்மத லீலை படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ், ட்ரெயிலர் உள்ளிட்டவர்கள் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு

இயக்குநர் வெங்கட் பிரபு

இயக்குநர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநரான அறியப்பட்டு வருகிறார். இவரது மங்காத்தா, சென்னை 28 உள்ளிட்ட படங்கள் இவரது முத்திரையை ரசிகர்களுக்கு எடுத்து சொல்லிய படங்கள். இந்தப் படங்களில் இவர் எடுத்துக் கொண்ட கதைக்களம் மிகவும் சிறப்பாக அமைந்தன.

சிறப்பான படமாக அமைந்த மாநாடு

சிறப்பான படமாக அமைந்த மாநாடு

தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்துவரும் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி வெளியான மாநாடு படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் சிம்பு நாயகனாக நடித்திருந்தார். வித்தியாசமான வகையில் டைம் லூப்பை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்திருந்தார் வெங்கட் பிரபு.

ரூ.100 கோடி கிளப் படம்

ரூ.100 கோடி கிளப் படம்

இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்ததுடன் தொடர்ந்து திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது. இந்த கொரோனா காலத்தில் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியது மாநாடு. மேலும் படத்தில் நடித்திருந்த சிம்பு, எஸ்ஜே சூர்யா ஆகியோருக்கும் இந்தப் படம் சிறப்பான படமாக அமைந்தது.

சினேகாவுடன் நாயகனாக வெங்கட்பிரபு

சினேகாவுடன் நாயகனாக வெங்கட்பிரபு

இதுமட்டுமின்றி நடிப்பிலும் தனியாக கவனம் செலுத்தி வருகிறார் வெங்கட் பிரபு. இவர் ஸ்நேகாவுடன் இணைந்து ஷாட் பூட் த்ரீ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்னை அருண் வைத்தியநாதன் இயக்கி வருகிறார். குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது.

எதிர்பார்ப்பை எகிறவைத்த மன்மதலீலை

எதிர்பார்ப்பை எகிறவைத்த மன்மதலீலை

இந்நிலையில் இவரது மன்மத லீலை படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கொரோனா சூழலில் இந்தப் படத்தை மாநாடு படத்துடன் இணைந்து இயக்கி முடித்துள்ளார் வெங்கட் பிரபு. திருமணத்திற்கு பின்பு ஏற்படும் காதலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

 தெலுங்கில் அடுத்த படம்

தெலுங்கில் அடுத்த படம்

முன்னதாக வெங்கட்பிரபுவின் அடுத்த படம் தெலுங்கில் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவரது அடுத்த படத்தில் நாக சைத்தன்யா மற்றும் பூஜா ஹெக்டே ஹீரோ மற்றும் ஹீரோயினாக இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் அருண் விஜய்யும் இணையவுள்ளார். அவர் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் படத்தின் சூட்டிங்கை வெங்கட் பிரபு துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழில் சிறப்பான இயக்குநராக தன்னை நிரூபித்துள்ள வெங்கட்பிரபு அடுத்ததாக தெலுங்கிலும் முத்திரையை பதிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X