Venkat prabhu: விஜய்தான் யுவன் சங்கர் ராஜா மியூசிக் வேணும்னு சொன்னார்.. வெங்கட்பிரபு சொன்ன சீக்ரெட்
சென்னை: நடிகர் விஜய்யின் 68வது படமாக சிறப்பான வகையில் உருவாகியுள்ளது கோட் படம். இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக அமைந்துள்ளது. படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் அடுத்தடுத்து 3 பாடல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இன்றைய தினம் கோட் படத்தின் 4வது சிங்கிள் வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் உருவாகியுள்ள கோட் படம் சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் 1000 கோடி கிளப்பில் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய், பிரஷாந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கோட் படம் இன்னும் சில தினங்களில் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை படம் ஏற்படுத்தியுள்ளது. எப்போதுமே விஜய்யின் பட ரிலீஸ்களை அவரது ரசிகர்கள் திருவிழாவாகவே கொண்டாடுவார்கள் என்ற நிலையில், இந்தப் படம் மேலும் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் எவர்கிரீன் படமான மங்காத்தாவை கொடுத்த வெங்கட்பிரபு, அதே போன்றதொரு மாஸ் படத்தை விஜய்க்காக உருவாக்கியிருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கோட் படம்: இது மட்டுமில்லாமல் கோட் மற்றும் தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்றவகையில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையும் வெங்கட் பிரபு களமிறக்கியுள்ளார். அவரது படங்கள் எப்போதுமே பார்ட்டி கொண்டாட்டத்துடன் இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் அவர் விஜய்யை எப்படி பயன்படுத்தியிருப்பார் என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மரண மாஸாக வெயிட்டிங்கில் உள்ளனர்.
யுவன் சங்கர் இசை: யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் படங்களில் பர்ஸ்ட் சிங்கிள் உள்ளிட்டவை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுவிடும். இந்தப் பாடல்களில் விஜய்யின் நடனமும் பெரிய கவனத்தை பெறும். உடன் ஆடும் நாயகிகளையும் தன்னுடைய ஆட்டத்திற்கு ஏற்ப ஆட வைத்துவிடுவார் விஜய். இந்நிலையில் கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விசில் போடு வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் பாடலிலும் பிரஷாந்த், பிரபுதேவாவையும் தனக்கு இணையாக ஆட வைத்து அழகு பார்த்துள்ளார் விஜய்.
யுவனை ஃபிக்ஸ் செய்ததே விஜய்தான்: படத்தில் அடுத்தடுத்து இரு பாடல்களை விஜய் பாடியுள்ளார். மேலும் மறைந்த பாடகி பவதாரணியையும் சின்ன சின்ன கண்கள் பாடலில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பாட வைத்து அசத்தியுள்ளார் யுவன். ஆயினும் கோட் படத்தின் பாடல்கள் ரசிகர்களை அதிகமாக கவரவில்லை. இதனிடையே இன்றைய தினம் படத்தின் 4வது சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்தப் பாடல் ரசிகர்களை கவருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனிடையே படத்தின் யுவன் சங்கர் ராஜா இசைதான் வேண்டும் என்று விஜய் தான் கூறியதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு -யுவன் காம்பினேஷன் தான் சிறப்பாக அமையும் என்று கூறிய விஜய், யுவனை கோட் படத்தின் இசையமைப்பாளராக ஃபிக்ஸ் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications