GOAT: கோட் சூப்பர் ஸ்டாரின் கதை.. வெங்கட் பிரபு தூக்கிப் போட்ட குண்டு.. விஜய் ரசிகர்கள் ஷாக்!

சென்னை: தளபதி விஜய் (Vijay ) நடிப்பில் உருவாகி வரும் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் தி கோட் (GOAT). இந்தப் படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ரிலீஸ் பணிகளிலும் புரோமோசன் பணிகளிலும் அர்ச்சனா கல்பாத்தி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். ஏற்கனவே படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகியிருந்தாலும், நேற்று அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி, படத்தின் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாளை முன்னிட்டு மட்ட பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. பாட்டு ரசிகர்களுக்குப் பிடித்துப் போனதால், பாடலைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் கதையை தான் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எழுதியதாக கூறியுள்ளார்.

கோட் படத்தில், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடித்துள்ளதைப் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.

goat venkat prabhu vijay rajinikanth

மேலும் படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி நடைபெறுவதைப்போல் காட்சி வைக்கப்பட்டுள்ளதால், படத்தில் தோனியும் இடம் பெற்றுள்ளார். இது தல தோனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் படத்தில் அஜித் திரையில் இடம் பெறும் காட்சியும் உள்ளது என வெங்கட் பிரபு ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்களும் செம குஷியில் உள்ளனர்.

goat venkat prabhu vijay rajinikanth

சூப்பர் ஸ்டார்: இந்நிலையில் கோட் படத்தின் கதையை தான் முதன்முதலில் எழுதும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்குத்தான் எழுதியதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார். இது குறித்து பேசுகையில், தி கோட் படத்தின் கதையை தான் கொரோனா ஊரடங்கு காலத்தில் எழுதினேன். இந்தக் கதையை தான் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தனுஷை மனதில் வைத்து எழுதினேன். அதன் பின்னர்தான் இந்தப் படம் விஜய் சாருக்குச் சொன்னேன். இரண்டு கதாபாத்திரங்களிலும் அவரே நடிக்க ஒப்புக்கொண்டார்.

goat venkat prabhu vijay rajinikanth

விஜய் சம்பளம் மற்றும் பட்ஜெட்: தமிழ் சினிமா வரலாற்றிலேயே டெக்னிக்கலாக உருவாக்கப்பட்ட படங்களில் தி கோட் படத்திற்குத்தான் அதிக செலவு செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு மொத்தம் ரூபாய் 400 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய்யின் சம்பளம் மட்டும் ரூபாய் 200 கோடி. மீதமுள்ள 200 கோடியில்தான் படத்தின் மற்ற செலவு. விஜய்யின் சம்பளம் மட்டும் இவரது நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மொத்த பட்ஜெட்டினை விட அதிகம்.

goat venkat prabhu vijay rajinikanth

1000 கோடி வசூல்: படத்தின் தயாரிப்பே ரூபாய் 400 கோடி. இந்தப் படத்தின் வசூல் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும் செய்யாத வசூலைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் சோலோவாக ரிலீஸ் செய்யப்படுகின்றது. மேலும் தமிழ் சினிமா வரலாற்றிலேயே ரூபாய் 1000 கோடிகளை அள்ளிய முதல் படம் என்ற சாதனையை தி கோட் படம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. படக்குழுவினரும் ரூபாய் 1000 கோடி வசூல் ஆகும் என நம்பிக்கையோடு உள்ளனர்.

goat venkat prabhu vijay rajinikanth

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X