Venkat prabhu: விஜய்யின் கோட் படத்திற்காக யுவன் மேஜிக் ஸ்டார்ட்ஸ்.. வெங்கட் பிரபு உற்சாகம்!

சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் முன்னதாக யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த இரண்டு லிரிக் வீடியோ பாடல்கள் வெளியாகி உள்ளன.

படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படத்தின் மூன்றாவது சிங்கிள் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்திலும் படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 3வது வாரத்திலும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் ப்ரோமோஷன்களை முன்னதாகவே துவங்கியுள்ள படக்குழுவினர் அடுத்தடுத்து படம் குறித்த அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே படத்தின் முதல் பாதியை பார்த்துள்ள விஜய் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Vijay The greatest of all time movie Venkat prabhu


நடிகர் விஜய்: நடிகர் விஜய, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. எப்போதும் ஜாலியான படங்களை கொடுத்து வரும் வெங்கட் பிரபு, இந்தப் படத்திலும் அதையே மெயின்டெயின் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத், பாங்காக் உள்ளிட்ட பல இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில், விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் படத்தின் டீ-ஏஜிங் வேலைகளுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று வந்ததையும் பார்க்க முடிந்தது.

கோட் படம்: கோட் படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்களை வைத்து வேலை வாங்கி உள்ள வெங்கட் பிரபு, தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளை துரிதப்படுத்தி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன். திரிஷாவுடன் இணைந்து வெங்கட் பிரபுவும் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார். படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையடுத்து படத்தின் மூன்றாவது சிங்கிள் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் படத்தின் இசை வெளியீடு நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

யுவன் மேஜிக்: படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை அவ்வப்போது படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பு வேலைகளை தற்போது யுவன் சங்கர் ராஜா துவங்கியுள்ளதாக வெங்கட் பிரபு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். யுவனின் மேஜிக் துவங்கியுள்ளதாக அவர் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். விரைவில் படத்தின் இசை வெளியீடு நடக்கவுள்ள சூழலில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை சிறப்பாக கவரும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களை கவர தவறவில்லை.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் அடுத்த சிங்கிள்: விரைவில் படத்தின் 3வது சிங்கிள் ரிலீசாக உள்ள நிலையில் அந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என்று எதிர்பார்க்கலாம். சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அப்பா -மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய Thalapathy 69 படத்திற்காக விஜய் ஹெச் வினோத்துடன் இணையவுள்ள நிலையில், வெங்கட்பிரபுவும் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X